ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 31 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 31 2018

  • டாடா டிரஸ்ட் மற்றும் திருப்பதி கோவில் தேவஸ்தானத்தின் கூட்டு முயற்சியாக திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஷ்வர புற்றுநோய் பராமரிப்பு மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான நிறுவனத்திற்கு (SVICCAR) அடிக்கல் நாட்டப்பட்டது.
  • ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூரில் உள்ள அப்பல்லோ மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதல் கட்ட அப்பல்லோ அறிவு நகரத்தை திறந்து வைத்தார்.
  • விமான நிலைய அதிகாரசபை (ஏஏஐ), கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவைகளை நிறுவியது.
  • புபனேஷ்வரில் உள்ள மஞ்சேஷ்வர் வளாகத்தில் முதலாவது தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தை (NSTI), ஸ்ரீ தர்மேந்திர பிரதான், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் & திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் திறந்து வைத்தனர்.
  • தேசிய ட்ரஸ்ட் மையம் அமைய டெலிகாம் குழு ஒப்புதல்
  • இந்திய பொருளாதாரம் 2018-19 ன் முதல் காலாண்டில் 8.2% வளர்ச்சியை பதிவு செய்கிறது
  • சென்சஸ் 2021ல் முதல் முறையாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் தரவுகளை (OBC) சேகரிக்க உள்ளது.
  • ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் (NMPB) ஏழாவது கூட்டம் புது டில்லியில் நடைபெற்றது.
  • ஸ்ரீனிவாசன் வெங்கடகிருஷ்ணன் – வேதாந்தா வளாகங்களின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) (வேதாந்தா)
  • ராமன் மாக்ஸேசே விருது [ஆசியாவின் நோபல் பரிசு] – இரண்டு இந்தியர்கள், பாரத் வாட்வானி மற்றும் சோனம் வாங்சுக்

ஆசிய விளையாட்டு 2018

  • பாய்மர படகுப் போட்டியில் பெண்களுக்கான 49er FX பிரிவில் வர்ஷா கவுதம், ஸ்வேதா ஷர்வேகர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஆண்களுக்கான 49er பிரிவின் மற்றொறு போட்டியில் வருண் தாக்கர் அஷோக் மற்றும் செங்கப்பா கணபதி கேலபண்டா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. பெண்களுக்கான ஒற்றையர் பாய்மர படகுப்போட்டியின் ஓப்பன் லேசர்7 பிரிவில் ஹர்ஷிதா தோமர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவில் சவுரவ் கோஷல் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • குத்துச்சண்டையில் விகாஸ் கிரிஷன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இந்திய மகளிர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றனர்

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!