நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 15,16 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 15,16 2019

தேசிய செய்திகள்

ஜார்கண்ட்

I & B அமைச்சகம் 2 வது JIFFக்கான நிதி உதவி வழங்க முடிவு

  • ராஞ்சியில் 2 வது ஜார்க்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவை அடுத்த மாதம் 1 ம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஏற்பாடு செய்துள்ளது. 5 லட்ச ரூபாய் உதவித் தொகையை வழங்குவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கேரளா

கொல்லம் புறவழிச் சாலையை, பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்

  • பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் கொல்லம் பகுதியில் கொல்லம் புறவழிச் சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். மத்திய-மாநில அரசு 50:50 கூட்டணியில் அமையும் நாட்டின் முதல் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் இதுவாகும்.

மத்தியப் பிரதேசம்

50,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி திட்டம்

  • மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத், ‘ஜெய் கிஷான் ரின் முக்தி யோஜனா’ எனும் திட்டத்தின் கீழ் 50,000 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

மகாராஷ்டிரா

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி. / எஸ்டி சமூகங்களுக்கான நிதி நலத்திட்டங்கள்

  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி. / எஸ்டி சமூகங்களின் நிதி நலனுக்காக 700 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை மகாராஷ்டிரா அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

புது தில்லி

டிடி அறிவியல்[Science]’ மற்றும் இணையம் சார்ந்த சேனல்இந்திய அறிவியல்ஆகியவை தொடங்கப்பட்டன

  • விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் புது டில்லியில் டி.டி. அறிவியல் மற்றும் இந்திய அறிவியல் சேனல்களை அறிமுகப்படுத்தினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக பிரத்யேகமாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பாக உள்ள முதல் தினசரி சேனல் டி.டி.அறிவியல்[Science] ஆகும், அதே நேரத்தில் இந்தியா அறிவியல் என்பது இணைய அடிப்படையிலான சேனல் ஆகும்.

இந்தியாவில் இருந்து 2300 முஸ்லீம் பெண்கள் ஹஜ் பயணம்

  • சுதந்திரம் பெற்றபின் முதல் முறையாக இந்தியாவில் இருந்து 2300 க்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்கள் இந்த ஆண்டு ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

ராஜஸ்தான்

ராஜஸ்தானின் சட்டமன்ற சபாநாயகர் தேர்வு

  • ராஜஸ்தானின் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சி.பி. ஜோஷி 15 வது சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சர்வதேச செய்திகள்

முன்னாள் ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி லாரன்ட் குபாக்போவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து  ஐசிசி விடுவித்தது

  • மனித குலத்திற்கு எதிராக மேற்கு ஆபிரிக்க நாடுகளில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து முன்னாள் ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி லாரன்ட் குபாக்போவை, ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) விடுவித்தது.

வணிகம் & பொருளாதாரம்

அரசு பத்திரங்களின் OMO கொள்முதலை RBI அறிவிக்கிறது

  • ரிசர்வ் வங்கி, அரசு பத்திரங்கள் வாங்குவதன் மூலம், அமைப்பில் 10,000 கோடி ரூபாய்களை செலுத்தும். திறந்த சந்தை நடவடிக்கைகளால் (OMOs) இந்த கொள்முதல் செய்யப்படும். இந்த மாதத்தில் 50,000 கோடி ரூபாய்க்கு OMO க்கள் கீழ் பணத்தை செலுத்துவதற்கு ஆர்.பி.ஐ திட்டமிட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரியல் எஸ்டேட் துறையில் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பிரச்சினையை சமாளிக்க அரசு குழு அமைப்பு

  • ஜி.எஸ்.டி யின் கீழ் ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்துவதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர் குழுவை (GOM) அரசாங்கம் அமைத்துள்ளது. குஜராத்தின் துணை முதலமைச்சர் நிதின் படேல் இந்தக்குழுவின் தலைவராக இருப்பார்.

இந்திய ஏற்றுமதிஇறக்குமதி வங்கி மறுமூலதனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியில் மறுமூலதனம் செய்வதற்கு வசதியாக, ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்திய அரசு மறுமூலதன பத்திரம் வெளியிடும். இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் மூலதனத்தை 10 ஆயிரம் கோடியிலிருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கு ஜனாதிபதி கோவிந்த் அங்கீகரித்தார்

  • நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
  • தற்போது நீதிபதி சஞ்சீவ் கன்னா தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார். கர்நாடகா உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக தினேஷ் மகேஸ்வரி உள்ளார்.

பொது பிரிவில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு 10% இட ஒதுக்கீடு

  • பொது பிரிவில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு 2019-20 கல்வியாண்டிலிருந்து 40,000 கல்லூரிகள் மற்றும் 900 பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு.

விருதுகள்

  • பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது – பிரதமர் நரேந்திர மோடி
  • ஒரு பிரதிநிதி அரசு மற்றும் சமூக நீதியை நம்புகிறவர், ஒரு நல்ல சமுதாயம் ஆரோக்கியமான வியாபார காலநிலையை உருவாக்கும் என்று நம்புகிறவர், வணிகங்கள் ட்ரிபிள் பாட்டம் லைனை நடைமுறைப்படுத்த ஊக்குவிப்பவர், அதாவது இலாபங்கள், மக்களை நிலைப்படுத்த மற்றும் பொது நன்மைக்காக முழுமனதுடன் உறுதியாக வேலை செய்கின்றவருக்கு கோட்லர் தலைமைத்துவ விருது வழங்கப்படும்.

விளையாட்டு செய்திகள்

இந்தியா Vs ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர்

  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.

AFC ஆசிய கோப்பை

  • ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பஹ்ரைனிடம் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.

உள்ளரங்க படகோட்டுதலில் உலக சாதனை

  • ஆசிய கோப்பையில் தங்க பதக்கம் வென்ற ஷகில் அகமது, கொல்கத்தாவில் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான பிரிவில்10 மணி நேரத்தில் ஒரு லட்சம் மீட்டர் மாதிரி தூரத்தை கடந்து முடித்ததன் மூலம் உலக சாதனை படைத்தார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!