நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 14 2018

0

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 14 2018

தேசிய செய்திகள்

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சர்

  • மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

பஞ்சாப்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசை வலியுறுத்தி பஞ்சாப் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் அமீர்ந்தர் சிங் தலைமையில் பஞ்சாப் சட்டமன்றத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கோரிய மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களிலும் 50 சதவீத இடங்களை பஞ்சாப் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானின் புதிய முதலமைச்சர்

  • அசோக் கெலாட் ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளனர்.

வணிகம் & பொருளாதாரம்

உலகளாவியக் கடன் 184 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்வு

  • சர்வதேச நாணய நிதியம், உலகளாவிய கடன் 184 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என அறிவிப்பு. இதில் பாதிக்கும் அதிகமாக அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் கடன் தொகை ஆகும் எனக்கூறினர்.
  • சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 225 சதவிகிதத்திற்கு இது சமமானதாகும்.

இன்டர்போல் மெஹுல் சோக்ஸிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் வெளியிட்டது

  • மாநில அரசு நடத்தும் பஞ்சாப் நேஷனல் வங்கியை 13,000 கோடி ரூபாய்க்கு ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட தலைமறைவான மெஹுல் சோகிசிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸை (RCN) இன்டர்போல் வெளியிட்டது.

மாநாடுகள்

உலக சுகாதார அமைப்பின் மருத்துவ சாதனங்கள் மீதான 4 வது உலகளாவிய கருத்துக்களம்

  • ஆந்திரப் பிரதேச மெட்டெக் மண்டலம், விசாகப்பட்டினத்தில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ சாதனங்கள் மீதான 4 வது உலகளாவிய கருத்துக்களம் நடைபெற்றது. வர்த்தக மற்றும் கைத்தொழில் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சக தொழில்சார் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் தேசிய மருத்துவ சாதன மேம்பாட்டுக் கவுன்சில் ஒன்றை அமைத்துள்ளார்.

நியமனங்கள்

  • ப்ரிஜேந்திர பால் சிங் இந்தியாவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன (FTII) சங்கத்தின் புதிய தலைவராகவும் ஆளும் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
  • ஸ்ரீ ராம்பால் பவார் – தேசிய குற்றப்பதிவு பணியகம் இயக்குநர் [NCRB]
  • ஸ்ரீ அசோக் குமார் சிங் – அட்டவணை பழங்குடியின தேசிய ஆணையத்தின் பொறுப்பு செயலாளர்(NCST)

திட்டங்கள்

மகிலா கிசான் விருதுகள் திட்டம்

  • மகிலா கிசான் விருதுகள் திட்டம், பெண் விவசாயிகள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை நாட்டிற்கு முன்னால் கொண்டுவரும் முயற்சியாகும்.
  • பிரசார் பாரதி தலைவர் டாக்டர் ஏ. சூர்யா பிரகாஷ் தூர்தர்ஷன் மகிலா கிசான் விருதுகளை புது டில்லியில் டிடி கிசான் சேனலில் தொடங்கி வைத்தார்.
  • இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தால், ஐ.சி.ஏ.ஆர். பெண் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டோல் பிளாஸாவில் நெடுஞ்சாலை கூடுகள்

  • தேசிய நெடுஞ்சாலை ஆணையம், NHAI, பயணிகள் ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் மேற்கொள்வதற்காக டோல் பிளாஸாவில் நெடுஞ்சாலை கூடுகள் அமைக்கத்திட்டம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இருதரப்பு ஆண்டு ஹஜ் 2019 ஒப்பந்தம்

  • 2019ஆம் ஆண்டு ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்க சவுதி அரேபியாவிடம் இந்தியா கோரிக்கை. சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சவுதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சரிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார். இரு தலைவர்களும் இருதரப்பு ஆண்டு ஹஜ் 2019 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

683 தனியார் FM ரேடியோ சேனல்களின் ஏலம்

  • 236 நகரங்களில்,தொலைவில் உள்ள சில இடங்களில் 686 தனியார் FM ரேடியோ சேனல்களுக்கு ஏலத்தில் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ரயில்வே அமைச்சகம் சுமை வீதத்தில் 25 சதவீத தள்ளுபடி செய்ய முடிவு

  • ரயில்வே அமைச்சகம் வெற்றுக் கன்டெய்னர்கள் மற்றும் வெற்று பிளாட் வேகன்கள் ஆகியவற்றின் போக்குவரத்திற்கு 25 சதவீத தள்ளுபடிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

எக்கோ நிவாஸ் சம்ஹிதா 2018[ECO Niwas Samhita 2018]

  • எக்கோ நிவாஸ் சம்ஹிதா 2018 – குடியிருப்பு கட்டிடங்களுக்கான ஆற்றல் பாதுகாப்பு கட்டட குறியீடு தொடங்கப்பட்டது.
  • இந்தக் குறியீடை செயல்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் 125 பில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 100 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வுக்கு சமமானது.

விளையாட்டு செய்திகள்

ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை

  • புவனேஸ்வரில் நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை கால் இறுதிப் போட்டியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் ஜெர்மனியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!