CTET தேர்வர்களின் கவனத்திற்கு – அட்மிட் கார்டு விவரங்கள்!!

0
CTET தேர்வர்களின் கவனத்திற்கு - அட்மிட் கார்டு விவரங்கள்!!
CTET தேர்வர்களின் கவனத்திற்கு - அட்மிட் கார்டு விவரங்கள்!!
CTET தேர்வர்களின் கவனத்திற்கு – அட்மிட் கார்டு விவரங்கள்!!

மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்வு நகரம் மற்றும் அட்மிட் கார்டு குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் இந்த வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

CTET தேர்வு:

மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வின் விண்ணப்பங்கள் 27/04/2023 முதல் 26/05/2023 வரை பெறப்பட்டு விண்ணப்ப செயல்முறைகள் முடிந்துள்ளது. தேர்வு கட்டணம் செலுத்தி இந்த நடைமுறைகளை முடித்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான இத்தேர்வு 20/08/2023 அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Forest Apprentice & Assistant Section Officer தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

விண்ணப்பதாரர்கள் CTET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் தேர்வின்படி தேர்வு நகரத்தை தேர்வு செய்ததாகவும், ஆனால் இப்போது தேர்வு ஆஃப்லைனில் நடத்தப்படுவதாகவும், தேர்வு மையங்கள் கிடைப்பதற்கு ஏற்ப தேர்வு நகரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் படிவத்தில் வழங்கிய தற்போதைய முகவரியின் மாவட்டத்தின் அடிப்படையில், அவர்களின் தற்போதைய முகவரியின் மாவட்டத்திற்கு அருகிலுள்ள தேர்வு நகரம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் நகரத்தை மாற்றுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் அட்மிட் கார்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு நகரத்தின் விவரங்கள், CTET இன் இணையதளத்தில் (https://ctet.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. CTET அட்மிட் கார்டு CBSEயின் இணையதளத்தில் (https://ctet.nic.in) 18/08/2023 அன்று பதிவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL ANNOUNCEMENT 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!