நடப்பு நிகழ்வுகள் – 2 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 2 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 2 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 2 ஆகஸ்ட் 2023

 

தேசிய செய்திகள்

5G ரேடியோ அணுகல் வகையிலான நெட்வொர்க் தீர்வுக்கான கூட்டு வளர்ச்சி ஒப்பந்தத்தில் C-DOT ஆனது பல்வேறு தொழிற்துறை கூட்டாளர்களுடன் இணைந்து கையொப்பமிட்டது.

  • டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையமானது(C-DOT), தொலைத்தொடர்புத் துறையின் (DoT) முதன்மை மற்றும் முக்கிய தொலைத்தொடர்பு R&D மையத்தின் தொழில் பங்குதாரர்களான சிக்னல்ட்ரான் சிஸ்டம்ஸ் நிறுவனம், லேகா வயர்லெஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், சூக்தா கன்சல்டிங் நிறுவனம் உட்பட மேலும் பல்வேறு நிறுவனங்களுடன் ஒரு கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் ஜூலை 2023 இல் கையெழுத்திட்டுள்ளது.
  • பிரிக்கப்பட்ட 5G ரேடியோ வகையிலான முறையான அணுகல் நெட்வொர்க் தீர்வுக்கான கூட்டு வளர்ச்சியை  மேம்படுத்துதல் மற்றும் வானொலி தொலை தொடர்பு தயாரிப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

CPEC இன் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் ஆகியவற்றிற்காக சீனாவும் பாகிஸ்தானும் ஆறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

  • பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான CPEC(சீனாபாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்) திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒத்துழைப்பை மேலும் துரிதப்படுத்தவும் அதனை விரிவுபடுத்தவும் சீனாவும் பாகிஸ்தானும் ஜூலை 31 2023 அன்று ஆறு முக்கிய பகிர்மான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
  • CPEC என்பது சீனாவின் வடமேற்கு துருவ ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி மற்றும் பாகிஸ்தான் நாட்டின் மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தை இணைக்கும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களின் 3,000-கிமீ நீளமான பாதையாகும். இது இந்தியாவின் காஷ்மீர் பகுதி அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(POK) வழியாக அமைவதால் இந்த திட்டத்திற்கு நீண்ட காலமாக இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மாநில செய்திகள்

G-20யின் அதிகாரத்துவத்திற்கான உச்சி மாநாடானது காந்திநகரில் தொடங்கியுள்ளது.

  • இந்தியாவின் தலைமையின் கீழ், G20யின் அதிகாரத்துவத்திற்கான (EMPOWER) உச்சி மாநாடானது குஜராத்தின் தலைநகரமான காந்திநகரில் ஆகஸ்ட் 01 அன்று தொடங்கியுள்ளது. இந்த மாபெரும் மாநாடானது மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • இது இரண்டு நாள் மாநாடாகும்(ஆகஸ்ட் 01 – ஆகஸ்ட் 02). பெண்கள் தலைமையிலான வளர்ச்சி: நிலையான, சமத்துவம் உள்ளடக்கிய மற்றும் சமமான உலகப் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல் என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

பிரதமர் மோடி மகாராஷ்டிராவின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

  • பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தின் குடியிருப்பு மற்றும் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆகஸ்ட் 01 அன்று அடிக்கல் நாடியுள்ளார்.
  • பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சியின்(பிசிஎம்சி) அதிகாரவரம்பிற்கு கீழ் உள்ள பகுதியில் அமைந்துள்ள கழிவுகளிலிருந்து எரிசக்தி தயாரிப்பு ஆலையையும்பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். சுமார் கிட்டத்தட்ட ரூ.300 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையானது, ஆண்டுதோறும் சுமார் 2.5 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளை பயன்படுத்தி மக்களுக்கு தேவைப்படுகின்ற மின்சாரத்தை தயாரிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை முன்னேற்றி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) கீழ் கட்டப்பட்ட 1,280 க்கும் மேற்பட்ட பல்முனை வீடுகளை பொது மக்களுக்கு பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியின் போது வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுட்டள்ளது.

விருதுகள்

பிரதமர் மோடி அவர்களுக்கு மதிப்புமிக்க லோகமான்ய திலக் தேசிய விருதானது வழங்கப்பட உள்ளது.

  • இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய மிக சிறந்த பங்களிப்பு மற்றும் மேன்மைக்காக அவருக்கு மதிப்புமிக்க லோகமான்ய திலக் தேசிய விருதானது ஆகஸ்ட் 01 அன்று வழங்கப்பட உள்ளது.
  • திலக் ஸ்மாரக் மந்திர் அறக்கட்டளையின் மூத்த மற்றும் தற்போதைய நிர்வாக தலைவர் தீபக் திலக், இந்த விருதினை பிரதமருக்கு வழங்கி கௌரவிக்கிறார். இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் மதிப்புமிக்க தலைவரான லோகமான்ய திலகரின் நினைவு தினமான ஆகஸ்ட் 1 அன்று, தேசத்தின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை மேற்கொண்ட நபர்களை மதிப்பளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

அகில இங்கிலாந்து இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியானது வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

  • இங்கிலாந்தின் பர்மிங்காம் மாநில பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான இங்கிலாந்து இளையோர் பூப்பந்து(பேட்மிண்டன்) சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இந்தியப் அணியின்  தாரிணி சூரி மற்றும் ரக்ஷா கந்தசாமி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • நவி மும்பையைச் சேர்ந்த இரண்டாம் தரநிலை வீராங்கனையான  ரக்ஷா கந்தசாமி, கனடாவின் முதல் நிலை வீராங்கனையான ஜாக்கி டென்டிடம் 21-19, 12-21, 11-21 என்ற நேர்புள்ளிகள் கணக்கில் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்து இந்த பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரங்கல் செய்திகள்

கேரள மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் புருஷோத்தமன் காலமானார்.

  • காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலத்தின் முன்னாள் சபாநாயகருமான வக்கம் புருஷோத்தமன்(வயது 95) ஜூலை 31 அன்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்
  • இவர் 2011 முதல் 2014 வரை மிசோரம் மாநிலத்தின் ஆளுநராகவும், 1993 முதல் 1996 வரை அந்தமான் தீவுகளின்(அந்தமான் மற்றும் நிகோபார் யூனியன் பிரதேசம்) 6வது துணைநிலை ஆளுநராகவும் (லெப்டினன்ட் கவர்னராகவும்) பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் 1982 முதல் 1984 வரையிலும், அதேபோல் மீண்டும் 2001 முதல் 2004 வரையிலும் கேரள மாநிலத்தின் சட்டமன்றத்தில் நீண்ட காலம் சபாநாயகராக இருந்தவர்.

முக்கிய தினம்

தேசிய காகித தினம் 2023 

  • இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்தியாவில் கையால் நெய்யப்பட்ட காகிதத் தயாரிப்பின் வளமான பாரம்பரியத்தை மதிப்பளிக்கவும், அதனை புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தலுக்காக, ஆகஸ்ட் 1, 1940 அன்று மகாராஷ்டிராவின் புனேவில் கையால் நெய்யப்படும் காகித நிறுவனத்தைத் தொடங்கி வைத்ததை நினைவு கூறும் விதமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 01 ஆம் நாளானது தேசிய காகித தினமாக கொண்டாடப்படுகிறது.
  • மேலும் இந்திய அரசியலமைப்பின் முதல் பிரதிகளானது இங்கு அச்சிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தினத்திற்கென்று எந்த ஒரு கருப்பொருளும் இல்லாமல் காகிதத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பொது மக்களுக்கு பரப்புதவத்தை நோக்கமாக கொண்டு இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!