குழந்தையை ஏலம் விட்ட விஜய் டிவி “குக் வித் கோமாளி” கனி – வைரலாகும் வீடியோ!

0
குழந்தையை ஏலம் விட்ட விஜய் டிவி
குழந்தையை ஏலம் விட்ட விஜய் டிவி "குக் வித் கோமாளி" கனி - வைரலாகும் வீடியோ!
குழந்தையை ஏலம் விட்ட விஜய் டிவி “குக் வித் கோமாளி” கனி – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமான கனி தற்போது குழந்தையை ஏலம் விடுவது போல ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்திருக்கிறார்.

ரீல்ஸ் வீடியோ:

விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே தனித்துவமாக தான் இருக்கும். குறிப்பாக வெற்றி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இரண்டு சீசன்கள் ஒளிபரப்பானது. மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் முதல் கோமாளிகள் வரை சினிமாவில் பல பட வாய்ப்புகளுடன் பிஸியாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் பிக்பாஸ் புகழ் வனிதா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் தான் நடிகை கனி.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகி ‘டாக்டர்’ நடிகையுடன் இணைந்த ரோஷினி – வைரலாகும் வீடியோ!

அவர் இயக்குனர் திருவின் மனைவியும், இயக்குனர் அகத்தியனின் மகளும் ஆவார். மேலும் சென்னை 28 படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமியின் அக்கா. இந்த நிகழ்ச்சியில் அவர் கேவிபி பாலாவை சமாளிப்பதை பார்த்தே பல ரசிகர்கள் பட்டாளமே கிடைத்தது. அந்த அளவிற்கு அவர் பிரபலமானார். அதன் பின் அவர் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கனி திருமணம் ஆனாலும் தாலி அணியவில்லை என யூடுப் லைவ்வில் கேள்வி கேட்டதற்கு அவர் அது தன்னுடைய இஷ்டம் என சரியான விளக்கம் ஒன்றை அளித்து சர்ச்சையில் சிக்கினார்.

கமல்ஹாசனுக்கு பதிலாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் – ரசிகர்கள் ஷாக்!

கனிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இன்ஸ்டாவில் பல ரீல்ஸ் வீடியோக்களை செய்து வருகிறார். தன்னுடைய கடைசி மகளுடன் அவர் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய மகளின் விலை 10 பைசா என கனியின் தங்கை சொல்ல, 10 பைசாவா இது 1500 ரூபாய் தெரியுமா என சூர்யா படத்தின் டயலாக்கை அவர் பேசி இருக்கிறார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அவரது நடிப்பு திறமையை பாராட்டி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!