பள்ளி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 2 வாரங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் பயின்று வந்த சுமார் 14 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பதிவுசெய்யப்பட்டதையடுத்து அப்பள்ளிக்கு 2 வாரங்கள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொற்று ஓய்ந்திருக்கும் சூழலில் ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் மதுபான விலையில் 10% தள்ளுபடி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இப்போது கொரோனவால் பாதிக்கப்பட்ட 14 மாணவர்களில், 12 பேர் 8 ஆம் வகுப்பிலும், மீதமுள்ள இரண்டு பேர் 9 ஆம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். இப்போது இம்மாணவர்களுக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில் அந்த பள்ளிக்கு மட்டும் 2 வாரங்கள் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இப்போது இம்மாணவர்கள் அனைவரும் பள்ளியில் உள்ள சிறப்பு அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனென்றால் கொரோனா தொற்றுடன் குழந்தைகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கும் தொற்று ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பஞ்சாபில், கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு பிறகு ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டன. இப்போது பள்ளிகளில் ஆறு அடி சமூக இடைவெளியை பராமரித்தல், வகுப்பறைகளை சுத்தம் செய்தல் போன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.