‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகி ‘டாக்டர்’ நடிகையுடன் இணைந்த ரோஷினி – வைரலாகும் வீடியோ!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலை விட்டு விலகி 'டாக்டர்' நடிகையுடன் இணைந்த ரோஷினி - வைரலாகும் வீடியோ!
'பாரதி கண்ணம்மா' சீரியலை விட்டு விலகி 'டாக்டர்' நடிகையுடன் இணைந்த ரோஷினி - வைரலாகும் வீடியோ!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகி ‘டாக்டர்’ நடிகையுடன் இணைந்த ரோஷினி – வைரலாகும் வீடியோ!

பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து சினிமா வாய்ப்புகள் காரணமாக அண்மையில் விலகியுள்ள ரோஷினி ஹரிபிரியன், டாக்டர் பட நடிகை ப்ரியங்கா மோகனன் உடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வைரல் வீடியோ:

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து அனைவர் மனதிலும் தனி இடத்தை பிடித்தவர் தான் ரோஷினி ஹரிப்பிரியன். இவர் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது போல் சீரியலில் நடித்திருப்பார். கண்ணம்மா அனைவரும் வெறுத்து ஒதுக்கும் நிலையில், டாக்டர் பாரதி மட்டும் கண்ணம்மாவின் பாசமான குணத்தை அறிந்து அவரை காதலித்து, அனைவரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அதன்பிறகு, பாரதியின் கல்லூரி தோழி இவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் பல மோசடிகளை செய்து, பாரதியையும், கண்ணம்மாவையும் பிரித்து விடுகிறார்.

கமல்ஹாசனுக்கு பதிலாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் – ரசிகர்கள் ஷாக்!

இதனால் கண்ணம்மா மிகவும் சிரமத்துடன் தனி ஒரு ஆளாக நின்று, தனது குழந்தையை வளர்த்து வருகிறாள். கண்ணம்மாவின் உண்மையான குணத்தை அறிந்து பாரதி மனம் மாறுவாரா?, அப்படி வரும் பாரதியை கண்ணம்மா மீண்டும் ஏற்றுக் கொள்வாளா? இல்லை ஒதுக்கிவிடுவாளா என்பது போன்ற முடிவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் இந்த தொடரை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அதிக புகழடைந்த ரோஷினி சமீபத்தில் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு சினிமா வாய்ப்புகள் வருவதால் தான் ரோஷினி விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“கோபியை பார்த்தா அப்படியே கோவமா பத்திகிட்டு வருது” பாக்கியலட்சுமி முதல் ரோஜா வரை – டாப் கமெண்ட்ஸ்!

அதேபோல், சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபலமாக இருப்பவர் ப்ரியங்கா மோகனன். தற்போது பிரியங்காவும், ரோஷிணியும் ஒன்றாக இருப்பது போல் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதனால் இருவரும் சேர்ந்து ஏதாவது படத்தில் நடிக்கிறார்களா என்றும், கண்ணம்மாவை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கருத்துக்கள் வருகின்றது. இதனால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!