“கோபியை பார்த்தா அப்படியே கோவமா பத்திகிட்டு வருது” பாக்கியலட்சுமி முதல் ரோஜா வரை – டாப் கமெண்ட்ஸ்!

0
"கோபியை பார்த்தா அப்படியே கோவமா பத்திகிட்டு வருது" பாக்கியலட்சுமி முதல் ரோஜா வரை - டாப் கமெண்ட்ஸ்!
“கோபியை பார்த்தா அப்படியே கோவமா பத்திகிட்டு வருது” பாக்கியலட்சுமி முதல் ரோஜா வரை – டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும், அதில் பிரபலமான ஒரு சில சீரியல்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெறுகின்றனர். அந்த சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்களில் ரசிகர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் இருக்கிறது.

டாப் கமெண்ட்ஸ்:

வெள்ளித்திரை படங்களை விட சின்னத்திரை சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்ப்பு உண்டு. காரணம் சினிமா கதைகள் 2 மணி நேரத்தில் முடிவடைந்துவிடும். ஆனால் சீரியல்களில் அப்படி இல்லாமல் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதால் சீரியல்கள் பார்க்கும் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். அந்த காலத்தில் பெண்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி தற்போது அனைத்து வயதினரையும் ஆண் பெண் என்ற வித்தியாசம் பார்க்காமல் சீரியல் பார்க்கும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது. முன்னணி சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரோஜா

ரோஜா சீரியலில், நவீன் அணுவை ஏமாற்ற சாமியார் போல வேடமிட்டு வருகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர், நவீன் மாறுவேடம் சூப்பர் .. நாளையும் காமெடி எபிசோட் தான் சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சாந்தி முகூர்த்தம் எப்போ வச்சுக்கலாம்ன்னு கேஸ் கட்டு பாத்து சொல்லுற .பர்ஸ்ட் சாமியார் நவீன் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ரோஜா நாடகத்தை 2000 எபிசோடுகள் கொண்டு போனால் நிச்சயமாக நல்லா இருக்கும் சந்திரலோகா நாடகம் மாதிரி என்று கூறியுள்ளார்.

‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் தொடரும் அக்ஷரா, சிபியின் மோதல் – விறுவிறுப்பாக வெளியான 2வது ப்ரோமோ!

மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜூன் பிளான் சூப்பர் என்று கூறியுள்ளனர். ஒருவழியா. பிரியாவ. வச்சி ‌. காமெடி பண்ணி முடிச்சாச்சு. இப்போ. நவீனின். காமடியா நவீனின். மாறுவேடம். சூப்பர்.என்று ஒருவர் கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை வீட்டு விசேஷத்திற்கு சமைக்க வரும் சமையல்காரரை சந்திரலேகா திட்டமிட்டு தடுக்கிறார். இதனால் தனம் யோசனையின் படி பாக்கியலட்சுமி சமைக்க வருகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அட பாக்கியா அம்மா நீங்க எங்க இங்க வந்தீங்க என்று கேட்டுள்ளார்.

சீரியல் நடிகை ரேஷ்மா, மதன் ஜோடிக்கு திருமண வாழ்த்து சொன்ன பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!

மற்றொரு ரசிகர் அப்படியே ராஜா ராணி கோஷ்டிய அழைத்தால் ஸ்வீட் செய்து கொடுத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் முன்னாடி ரெண்டு சீரியல் வச்சி மகாசங்கம் ஏற்பாடு பண்ணீங்க இப்போ 3-வது சீரியலை கூட்டீங்களாக நடத்துங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பரவாயில்லை 3 சீரியலையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம் என்று கூறியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் கண்ணம்மாவும் சமையல் தான் செய்யுராங்க அவங்களையும் கூப்பிடுங்க என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது அப்போது பாரதி வர அஞ்சலி அகில் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது அஞ்சலி நிலைமையை பற்றி கண்ணம்மா சௌந்தர்யாவிடம் சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவாயில்லை 3 பேரையும் காப்பாத்திட்டீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணம்மா ரோஷ்னி அளவுக்கு நேட்சுரலா இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த கண்ணம்மாவ பார்த்தா அஞ்சலிக்கு தங்கச்சி மாதிரி இருக்கு பழைய கண்ணம்மாவ போடுங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கெல்லம் காரணம் வெண்பா தான் அப்படீனு எப்போ தெரியவரும் என்று கேட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர் இதுக்கும் கண்ணம்மாதான் காரணம்னு சொல்லி பாரதி சண்டை போடுவானோ என்று கேட்டுள்ளார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் சமையல் போட்டிக்கு செல்லும் டிக்கெட் தொலைந்து விட குடும்பத்தினர் அனைவரும் போகாமல் இருக்கின்றனர். இது குறித்து ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னாச்சு ஹிந்தில எல்லாம் சிங்கப்பூர் போவாங்களே இங்க போகல பட்ஜெட் பிரபலமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்னப்பா சீரியல் எடுக்குறீங்க அர்ச்சனா மட்டும்தான் இந்த ட்ரிப் வேண்டாம் வேண்டாம் னு சொல்லுது ஆன அதுமேல உங்களுக்கு டவுட்டே வரலையா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கும் காரணம் சந்தியா தான் என்பது சிவகாமியின் வாதம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ச்சனா எப்போது மாட்டுவார் என்று கேட்டு வருகின்றனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா அவருடைய காசில் அனைவருக்கும் தீபாவளிக்கு துணி எடுத்துக் கொடுக்கிறார். கோபிக்கும் எடுத்து கொடுக்க அவர் வேண்டாம் என கோவமாக பேசுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி பார்த்தா அப்படியே கோவமா பத்திகிட்டு வருது என்று கூறியுள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ பரினா & அஞ்சலிக்கு பிறந்த ஆண் குழந்தை – கலாய்க்கும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்!

மற்றொரு ரசிகர் நீ பண்ற காரியத்துக்கு உனக்கு மரியாதை ஒரு கேடு உண்மை தெரியும் போது இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி மாதிரி புருஷன் எல்லாம் செம்ம தண்டனை கொடுக்கனும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் தங்கை வேறு ஒருவருடன் சேர்ந்து சுற்றுவதை மாயன் பார்த்துவிடுகிறார். அவர் பின் தொடர்ந்து செல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் விறுவிறுப்பா போன சீரியலை ஏன் இப்படி மொக்க பண்றீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் மாயன் பின்னாடியே வந்தீங்களே என் திட்டும் போது வேடிக்கை பார்க்குறீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் மாயன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் மாஸ்டர் பிளான் அடுத்த எபிசோடுகள் என்று கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!