Commonwealth Games 2022: பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் – வாழ்த்தும் ரசிகர்கள்!

0
Commonwealth Games 2022: பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - வாழ்த்தும் ரசிகர்கள்!
Commonwealth Games 2022: பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - வாழ்த்தும் ரசிகர்கள்!
Commonwealth Games 2022: பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் – வாழ்த்தும் ரசிகர்கள்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் இந்திய வீரர்களின் அற்புதமான விளையாட்டு தொடர்கிறது. ஆண்களுக்கான 109 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி:

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் 4-ம் நாளின் போது மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் வெள்ளியும், ஜூடோ ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விஜய் குமார் யாதவ் வெண்கலமும், மகளிர் பளுதூக்குதலில் 71 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலமும் வென்றனர். இதைத் தொடர்ந்து நேற்று 5-ஆம் நாளில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

Whatsapp பயனர்களுக்கான புதிய அப்டேட் – DPயில் வரவிருக்கும் புதிய வழிமுறைகள்!

லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அதாவது காமன்வெல்த் போட்டிகளில் 5-ம் நாளான நேற்று இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது. மேலும் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாக்குர், ஆடவர் 96 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் 109 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங், 355 கிலோ எடையைத் தூக்கி வெண்கலம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 192 கிலோ எடையைத் தூக்கி அவர் 3ம் இடம் பிடித்தார்.

Exams Daily Mobile App Download

அதாவது இறுதிப் போட்டிக்கு தேர்வாகி தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் சுற்றில் இருந்தார் லவ்ப்ரீத். அந்த சுற்றில் பின்னடைவை சந்தித்தாலும், வெண்கலம் வெல்லும் வாய்ப்பை தவற விடவில்லை. கிளீன் அண்ட் ஜெர்க் முறை மூலம் மொத்தம் 355 கிலோ எடை தூக்கி அசத்திய அவர், வெண்கலப் பதக்கத்தையும் தன்வசப்படுத்தினார். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற 14வது பதக்கம் இதுவாகும். அதேசமயம், ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கிடைத்த நான்காவது வெண்கலம் பதக்கமாகும். 2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!