Whatsapp பயனர்களுக்கான புதிய அப்டேட் – DPயில் வரவிருக்கும் புதிய வழிமுறைகள்!

0
Whatsapp பயனர்களுக்கான புதிய அப்டேட் - DPயில் வரவிருக்கும் புதிய வழிமுறைகள்!
Whatsapp பயனர்களுக்கான புதிய அப்டேட் - DPயில் வரவிருக்கும் புதிய வழிமுறைகள்!
Whatsapp பயனர்களுக்கான புதிய அப்டேட் – DPயில் வரவிருக்கும் புதிய வழிமுறைகள்!

Whatsapp செயலியில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்கள் வந்தபடியே இருக்கிறது. இந்நிலையில், பிரைவசி பற்றிய சில முக்கிய அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்:

உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பயனாளர்களின் வசதிக்காக அவ்வப்போது சில அப்டேட்களும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றம் முதலான அனைத்து தேவைகளுக்காகவும் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கூடிய விரைவில் வாட்ஸ்ஆப் நிருவனம் பிரைவசி அப்டேட்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது யார் யாரெல்லாம் உங்களது வாட்ஸ்ஆப் last seen ஐ பார்க்க வேண்டும் மற்றும் status, DP ஆகியவற்றை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் நினைவுச் சின்னங்களை பார்வையிட இலவச அனுமதி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

ஆரம்பத்தில் statusக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதாவது, whatsapp status ஐ யார் பார்க்க கூடாது என்று நினைக்கிறோமோ அவர்களை நீக்கி விடலாம். தற்போது அதே போல last seen மற்றும் DP யை யார் பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இதற்கு முதலில் வாட்ஸ்ஆப் settings பகுதிக்கு சென்று account என்கிற பகுதிக்குள் நுழைய வேண்டும். பின்னர் அதில் உள்ள Privacy என்பதை கிளிக் செய்ய வேண்டும். அந்த Privacy மெனுவில் Profile போட்டோ, last seen மற்றும் status மாற்றுவதற்கான அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Exams Daily Mobile App Download

அதில் Profile போட்டோ, last seen மற்றும் status க்கு everyone என்று கொடுத்தால் உங்களது Profile போட்டோ, last seen மற்றும் status அனைவருக்கும் காண்பிக்கப்படும். அதே போல My contact என்று கொடுத்தால் உங்களது போனில் பதிவு செய்திருப்பவர்களுக்கு மட்டும் காண்பிக்கப்படும். அதே நேரத்தில் யார் மட்டும் பார்க்க வேண்டும் என்பதற்கு My contact except பகுதிக்குள் சென்று யார் யாரெல்லாம் உங்களது Profile போட்டோ, last seen மற்றும் status ஆகியவற்றை பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!