Common Wealth போட்டிகள் 2022: இந்தியாவுக்கு தொடரும் பதக்க மழை – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!

0
Common Wealth போட்டிகள் 2022: இந்தியாவுக்கு தொடரும் பதக்க மழை - வாழ்த்தி வரும் ரசிகர்கள்!
Common Wealth போட்டிகள் 2022: இந்தியாவுக்கு தொடரும் பதக்க மழை - வாழ்த்தி வரும் ரசிகர்கள்!
Common Wealth போட்டிகள் 2022: இந்தியாவுக்கு தொடரும் பதக்க மழை – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரர் லக் ஷயா சென் தங்கம் வென்று ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளார்.

Common Wealth போட்டி:

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவருக்கான 51 கிலோ எடைப் பிரிவு பிளை வெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் அமித் பங்கல் தங்கம் வென்றார். இதை தொடர்ந்து மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு மிடில்வெயிட் குத்துச்சண்டை இறுதி சுற்றில், இந்தியாவின் நீத்து கங்காஸ், இங்கிலாந்தின் டேமி ஜேட் உடன் மோதினார். இப்போட்டியில், நீத்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து வீராங்கனையை பின்வாங்கச் செய்தார். முடிவில், 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற நீத்து கங்காஸ், தங்கத்தை கைப்பற்றினார்.

காமன்வெல்த் போட்டியில் அடுத்த பதக்கத்தை உறுதி செய்த சத்யன் ஞானசேகரன் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மேலும் மும்முறை தாண்டுதல் போட்டியில், இந்தியாவின் எல்டாஸ் பால், 17 புள்ளி 03 மீட்டர் நீளம் தாண்டி, முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான அப்துல் அபு பக்கர், 17 புள்ளி 02 மீட்டர் நீளம் தாண்டி, வெள்ளி பதக்கத்தை வசப்படுத்தினார். இதனால், டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா இரட்டை பதக்கம் வென்று அசத்தியது. மேலும் மகளிர் ஹாக்கி தொடரில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது. இன்றுடன் போட்டிகள் நிறைவு பெறக்கூடிய சூழலில் இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மலேசிய வீரர் சே யங்கை 19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் லக் ஷயா சென் வீழ்த்தினார். மேலும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் வென்ற நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக் ஷயா சென் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு 2 வது தங்கம் கிடைத்துள்ளது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் உள்பட 57 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!