மாநிலத்தில் நாளை மஞ்சள் அலர்ட் – முதலமைச்சர் அறிவிப்பு!

0
மாநிலத்தில் நாளை மஞ்சள் அலர்ட் - முதலமைச்சர் அறிவிப்பு!
மாநிலத்தில் நாளை மஞ்சள் அலர்ட் - முதலமைச்சர் அறிவிப்பு!
மாநிலத்தில் நாளை மஞ்சள் அலர்ட் – முதலமைச்சர் அறிவிப்பு!

கேரளாவில் 2 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மஞ்சள் அலர்ட்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் பெய்யத் தொடங்கியது. அப்போதிலிருந்து கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், கேரளா முதல் குஜராத் வரையிலான பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள தீவிர வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் தொடர் மழை காரணமாக வட கேரளாவில் கடலுண்டி (மலப்புரம்), பாரதபுழா (பாலக்காடு), ஷிரியா (காசர்கோடு), கரவனூர் (திருச்சூர்) மற்றும் காயத்ரி (திருச்சூர்) ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனுடன், தெற்கு கேரளாவில் உள்ள வாமனபுரம் (திருவனந்தபுரம்), நெய்யாறு (திருவனந்தபுரம்), கரமனா (திருவனந்தபுரம்), கல்லடா (கொல்லம்), மணிமலை (இடுக்கி), மீனச்சில் (கோட்டயம்), கொத்தமங்கலம் (எரணாகுளம்) ஆகிய ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் 6% அகவிலைப்படி (DA) உயர்வு?

இந்த நிலையில், கேராளாவில், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கையின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வயநாடு, கோழிக்கோடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஒவ்வொரு குழு தயார் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!