சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள் பெறுவதில் சிரமம் – முக்கிய அறிவுறுத்தல்!

0
சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள் பெறுவதில் சிரமம் - முக்கிய அறிவுறுத்தல்!

சென்னை மெட்ரோ ரயில் சேவை பயணிகள் டிக்கெட்களை பெறுவதற்கு பல்வேறு வகையிலான வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ டிக்கெட்:

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் முடிவடைந்து கடந்த பல ஆண்டுகளாக மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. மெட்ரோ ரயில் சேவையில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் பணி, கல்வி மற்றும் இலக்குகளை நோக்கி பயணித்து வருகின்றனர். பயணிகளின் நேரத்தை சேமிக்கும் வகையில் மெட்ரோ ரயிலுக்கு பல்வேறு வகையிலான முறையிலும் டிக்கெட்களை எடுக்கும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 26 ம் தேதி வரை பள்ளிகள் இயங்கும் – கல்வித்துறை தகவல்!

இவற்றில் WhatsApp Chat Bot மூலம் டிக்கெட் பெறும் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக இயங்கவில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. எனவே பயணிகள் மொபைல் செயலி, பேடிஎம், போன் பே, சிங்காரச் சென்னை அட்டை, CMRL பயண அட்டை போன்ற பிற சேவைகளின் மூலமாக டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!