சென்னை மாநகராட்சியில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
சென்னை மாநகராட்சி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Obstetrician / Gynecologist, Obstetrician / Gynecologist, Surgeon, General Medicine, Orthopaedic & Dentists பணிக்கான காலிப்பணியிடங்க நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Obstetrician / Gynecologist, Obstetrician / Gynecologist, Surgeon, General Medicine, Orthopaedic & Dentists பணிக்கென 60 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / DGO MD / DCH / MS / MBBS / BDS / MDS போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான டிகிரியில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Obstetrician / Gynecologist, Pediatrician, Surgeon, General Medicine மற்றும் Orthopaedic பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.90,000/- ஊதியமாக வழங்கப்படும்.
- அதேபோல் Dentists பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.34,000/- ஊதியமாக பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொடரி குறித்து அறிவிப்பில் காணலாம்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி வாய்ந்த நபர்கள் மட்டும் 13.05.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த முழு விவரங்கள் அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 9.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.