வாட்ஸ் அப் மட்டும் இருந்தா போதும்.. இனி உங்களின் Credit score பார்ப்பது ஈஸி – வழிமுறைகள் உள்ளே!

0
வாட்ஸ் அப் மட்டும் இருந்தா போதும்.. இனி உங்களின் Credit score பார்ப்பது ஈஸி - வழிமுறைகள் உள்ளே!
வாட்ஸ் அப் மட்டும் இருந்தா போதும்.. இனி உங்களின் Credit score பார்ப்பது ஈஸி - வழிமுறைகள் உள்ளே!
வாட்ஸ் அப் மட்டும் இருந்தா போதும்.. இனி உங்களின் Credit score பார்ப்பது ஈஸி – வழிமுறைகள் உள்ளே!

இனி உங்களின் credit score-ஐ சுலபமாக சரிபார்த்துக் கொள்ளலாம். அதுவும் உங்களின் WhatsApp செயலி மூலமாக சரி பார்ப்பதற்கான வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Credit score

பொதுவாக கடன் வழங்கும் நிறுவனங்களிலும் அல்லது வங்கிகளிலும் தனிநபருக்கு கடன் வழங்க அவரின் credit score முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான 3 இலக்க எண்களைக் கொண்டதாகும். இந்த credit score பயனாளர்களின் நிதி நடவடிக்கைகளை பொறுத்தே ஏற்ற இறக்கத்தை சந்திக்கும். ஆனால் இதனை சரி பார்ப்பது என்பது சற்று சிக்கலான செயலாகும். தற்போது இதனை எளிமையான முறையில் எக்ஸ்பிரியன் இந்தியா நிறுவனம் வழங்குகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிறுவனம் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் கிரெடிட் பீரோ உரிமம் பெற்ற முதல் நிறுவனமாகும். இந்நிறுவனம் ஒருவரின் கிரெடிட் அறிக்கையை உடனடியாக சரிபார்த்து அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சரி செய்வதற்கு உதவி செய்கிறது. மேலும் இதன் மூலமாக மோசடிகள் நடைபெறுவதையும் சுலபமாக கண்டறியலாம்.

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – நவ.11,12ம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும்!

Exams Daily Mobile App Download

இதன் மூலமாக தனிநபர் தனது கிரெடிட் ஸ்கோரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். தற்போது ஒருவரின் கிரெடிட் ஸ்கோரை எளிமையான முறையில் உடனடியாக சரி பார்ப்பதற்கென இந்நிறுவனம் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது‌. மேலும் இது தொடர்பாக இந்நிறுவனத்தின் மேலாளர் நீரஜ் தவான் கூறியதாவது, இந்தியாவில் 48 மில்லியன் கணக்கான மக்கள் whatsapp செயலியை உபயோகப்படுத்தி வருகின்றனர். அதனால் வாட்ஸ் அப் மூலமாக தங்களின் கிரெடிட் ஸ்கோர் உடனடியாக சரி பார்த்துக் கொள்ள வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!