PPF, SSY உட்பட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம்? மத்திய அரசு அறிவிப்பு!
PPF, SSY மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உட்பட சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வட்டி விகிதங்களில் மாற்றம்:
RBI ரெப்போ விகிதத்தை அதிகரித்த பிறகு, இப்போது நிதி அமைச்சகம் சிறுசேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டி விகிதத்தை அதிகரிக்கக் கூடும் என தகவல் வெளியாகியது. மேலும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதம் உயரும் என பலர் எதிர்பார்ப்பில் இருந்தனர். மேலும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த மதிப்பாய்வின் போது, வட்டி விகிதத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ அல்லது நிலையானதாக வைத்திருக்கவோ முடிவு எடுக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் நிதி அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.
Exams Daily Mobile App Download
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் நீண்ட காலமாக எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் ஜூலை – செப்டம்பர் மாதங்களுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்துடன் ஒன்பது காலாண்டுகளாக சிறு சேமிப்பு வட்டி மாற்றப்படாமலேயே உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய திட்டம் அறிமுகம்!
தற்போது சிறு சேமிப்பு திட்டங்களில், பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) 7.10% வட்டி விகிதமும், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்திற்கு (SCSS) 7.40% வட்டி விகிதமும், தபால் அலுவலக ஃபிக்சட் டெபாசிட்க்கு 5.5% – 6.7% வட்டி விகிதமும், தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு (NSC) 6.8%வட்டி விகிதமும், மாத வருமானத் திட்டத்திற்கு (MIS) 6.6%, கிசான் விகாஸ் பத்திரம் (KVP) 6.9% வட்டி விகிதமும், செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு 7.6% வட்டி விகிதமும், 1 ஆண்டு கால வைப்பு – 5.5 வட்டி விகிதமும் , 2 ஆண்டு கால வைப்பு 5.5 வட்டி விகிதமும் , 3 ஆண்டு கால வைப்பு 5.5 வட்டி விகிதமும், 5 ஆண்டு கால வைப்பு 6.7 வட்டி விகிதமும் , எக்ஸ். 5 ஆண்டு தொடர் வைப்பு: 5.8 வட்டி விகிதமும் , 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 7.4 வட்டி விகிதமும் , 5 ஆண்டு மாத வருமான கணக்கு 6.6 வட்டி விகிதமும் வழங்கபடுகிறது.