தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

இரண்டு திருமணம் செய்யும் அரசு ஊழியர்களை கண்டிக்கும் வகையில் அதிரடி உத்தரவு தமிழக அரசு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் விதிகளை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி, குற்றவியல் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

அரசு பணியாளர்கள்

1973ஆம் வருடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின்படி , 19ம் பிரிவின்படி, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போது, எந்த ஒரு அரசு பணியாளரும், மற்றொரு திருமணம் புரிவதோ அல்லது வேறு விதமான திருமண பந்தத்தில் ஈடுபடக் கூடாது. அப்படி மீறினால் , குடிமைப் பணிகள் ஒழுங்குமுறை விதிகளின்படி, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதாகும்.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 2023ம் கல்வியாண்டு பாடத்திட்டம் வெளியீடு! ஒரே முறையில் தேர்வு!

அதனடிப்படையில் , தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி ராஜேந்திரன், அனைத்து துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள், பணியில் இருந்தாலும், விடுப்பில் இருந்தாலும், அயல் பணியில் இருந்தால், அரசு பணியாளர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்கள் தான். இந்திய தண்டனை சட்டப் பிரிவின்படி, கணவர் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் மற்றொரு திருமணம் செய்து கொண்டால், அவர்கள் தண்டனைக்கு உட்பட்டவர்களாக கருதப்படுகின்றது.

அரசுப் பணியாளர்கள் ஒரு வருடம் பணி நிறைவடைந்ததும் தங்கள் குடும்ப விவரங்கள் படிவம் ஒன்றில் அளிக்க வேண்டும் அப்படி அளிக்கப்பட்டால் நடத்தை விதிகளின்படி அரசு பணியாளர்கள் எவரும் அரசு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய சட்டத்திற்குப் புறம்பான ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடக்கூடாது அரசு பணியாளர்கள் ஓய்வு அல்லது இறப்பு பின்னர் திருமணம் குறித்து தகவல்கள் தலைமைச் செயலகத்தில் தெரியவருகிறது. அரசு ஊழியர் சட்டப்படியான வாழ்க்கை துணைக்கு ஓய்வூதிய பயன்கள் அளிப்பது இடையூறுகளால் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அதனால் அதனை தவிர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி தமிழக அரசு சார்பில் பல வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

* துறை அதிகாரிகள், அரசு பணியாளரின் குடும்ப விபரங்களை, படிவம் மூன்றில் பெறுவதுடன், முறையான சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்த பின்னர் , அதன் விபரங்களை, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

* அரசு பணியாளர்கள் பணியில் சேரும்போது அல்லது திருமணத்திற்கு பின் வழங்கும், ‘நாமினேஷன்’ தொடர்பான வாரிசு ஆவணங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதன்பின், பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். சந்தேகம் எழுந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்திய பின், பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

* இரண்டு திருமணம் அல்லது வேறு தவறான நடத்தையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அந்த பணியாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மற்றொரு திருமணம் செய்த குற்றத்திற்காக, போலீஸ் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் அடிப்படையில், அத்தகைய நபர் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டும்.

* அனைத்து தலைமைச் செயலகத் துறைகளும், அதன் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களுக்கு, இந்த அறிவுறுத்தல்களை தெரிவித்து, தவறாமல் பின்பற்ற செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!