நீல நிறத்தில் ஆதார் அட்டையா.. யாருக்குனு உங்களுக்கு தெரியனுமா? அப்போ இத பாருங்க முதல்ல!  

0
நீல நிறத்தில் ஆதார் அட்டையா.. யாருக்குனு உங்களுக்கு தெரியனுமா? அப்போ இத பாருங்க முதல்ல!  

இந்தியாவில் வழங்கப்படும் நீல நிற ஆதார் அட்டையை பெறும் விதமும், அதன் பயன்களும், அதை யாரால் பெற முடியும் என்னும் முழு விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

நீல நிற ஆதார் அட்டை:

இந்தியாவை பொறுத்தமட்டில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் பயனர்களின் கைரேகை, பெயர், முகவரி, பிறந்த தேதி, அலைப்பேசி எண் மற்றும் UIDAI ஆல் வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இத்தகைய ஆதார் அட்டையானது 2018 ஆம் ஆண்டு முதல் பிறந்த குழந்தைகளுக்கு UIDAI நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இது நீலநிற ஆதார் அட்டை அல்லது பால் ஆதார் என அழைக்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை குழந்தையின் 5 வயது வரை மட்டுமே பயன்படுத்த இயலும்.

தமிழகத்தில் நாளை (பிப்.24) வேலைவாய்ப்பு முகாம் – 30000 பேருக்கு வேலை! அரசு ஏற்பாடு!

இது குழந்தையின் பெற்றோர்களில் ஒருவரின் ஆதாருடன் இணைக்கப்படும். எனவே இந்த ஆதார் அட்டைக்கு குழந்தையின் பயோமெட்ரிக் அவசியமில்லை. குழந்தைக்கு 5 வயது நிரம்பியவுடன் பயோமெட்ரிக்கை இணைத்து புதிய ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க குழந்தையின் பிறப்பு சான்றிதழ், மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் சீட்டு அல்லது பள்ளியின் அடையாள அட்டையின் நகலை பயன்படுத்தலாம். இவ்வாறு பெறப்படும் ஆதார் அட்டையை பயன்படுத்தி குழந்தைகளுக்கான EWS உதவித்தொகையை பெறலாம் மற்றும் பள்ளிகளில் எளிதாக சேர்க்கலாம். இதை பெற விருப்பும் நபர்கள் https://uidai.gov.in/ என்ற இணைய தளத்திற்கு சென்று முதலில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 60 நாட்களுக்குள் நீல நிற ஆதார் அட்டை:யானது வழங்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!