
தன்னை பற்றிய உருவ கேலிகளை தாண்டி சாதனை படைத்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ஆச்சர்யமளிக்கும் திரைப்பயணம்!
பாரதி கண்ணம்மா சீரியலில் கதையின் நாயகியாக தோன்றி பலரின் விருப்ப நாயகியாக மாறிய ரோஷினி தற்போது அடைந்திருக்கும் உயரத்தை அடைய பல சோதனைகளை தன் வாழ்க்கையில் கடந்து வந்துள்ளார். அவரை பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
ரோஷினி ஹரிப்பிரியன்:
தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு முக்கிய போட்டியாளராக கலக்கி வருபவர் ரோஷினி ஹரிப்பிரியன். இவர் ஆரம்பத்தில் பல இன்னல்களை கடந்து தான் இந்த துறையில் தனி அடையாளத்தை உண்டு பண்ணி இருக்கிறார். நன்கு படித்த குடும்பத்தில் பிறந்த ரோஷினி மட்டும் மிகவும் சாதாரணமாக மதிப்பெண் பெறக்கூடியவராக இருக்கிறார். 12ம் வகுப்பில் ஓரளவுக்கு மதிப்பெண்களை எடுத்து எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்து விடுகிறார். அங்கு ஒரு சில வேலைகளை செய்து சம்பாதிக்க தொடங்குகிறார். அதன்பிறகு எம்பிஏ படிக்க தொடங்குகிறார்.
செய்த தவறால் சிறையில் அடைக்கப்படும் கோபி, பதறும் பாக்கியா? – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் திருப்பங்கள்!
கல்லூரியில் படிக்கும் போதும் பல விதமான உருவ கேலிகளை சந்தித்து இருக்கிறார். இதனால் தான் சிரிப்பதை கூட முழு மனதோடு செய்ய முடியாமல் இருக்கிறார். அதன்பிறகு ஒரு ஐடி அலுவலகத்தில் பணியில் சேருகிறார். ஆனால் அங்கு வேலை செய்வதற்கு பல சிக்கல்கள் வரவே, வேறு ஏதாவது செய்யலாம் என்று எண்ணியவருக்கு அப்போது தான் மாடலிங் துறையில் ஆர்வம் எழுந்துள்ளது. இதனால் தான் செய்து கொண்டிருந்த பணியை விட வேண்டிய சூழல் வருகிறது. ரோஷினியின் பெற்றோர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை.
அவர்களை சம்மதிக்க வைத்து, மாடலிங் துறையில் நுழைகிறார். ஆனால் ஆரம்பத்தில் விளம்பர பட வாய்ப்புகள் கூட கிடைக்காமல் தவிக்கிறார். ரோஷினியின் நிறம் தான் அனைத்து இடங்களிலும் நிராகரிப்பை சம்பாதித்தது. இறுதியாக பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஆடிஷன் நடப்பதை அறிந்து செல்கிறார். இவரது நிறுத்தினால் தான் இந்த வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழகம் முழுவதும் கண்ணம்மாவாக மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து உள்ளார்.