பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசிய தகவல்கள்!

0
பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசிய தகவல்கள்!
பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசிய தகவல்கள்!
பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசிய தகவல்கள்!

பாக்கியலட்சுமி தொடர் கோபியின் நடிப்பால் மட்டுமே ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது. தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் குறித்தான பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி கோபி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு கோபியை பற்றிய உண்மைகள் தெரியவருமா, பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்வாரா என பல திருப்பங்களுடன் ஓடி கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் பாக்கியலட்சுமி தொடர் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது கூட சிறந்த சீரியல் என்கிற விருதை பாக்கியலட்சுமி சீரியல் தான் வென்றது மற்றும் சிறந்த வில்லனுக்கான விருதை கோபி வாங்கினார்.

தனது மகள் லட்சுமியுடன் இணைந்த கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த திருப்பம்!

கோபியின் நடிப்புக்காக மட்டுமே பாக்கியலட்சுமி சீரியலை பலரும் பார்த்து கொண்டிருக்கின்றனர். கோபியின் நடிப்புக்கு ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி இருக்க வேண்டும். அந்த அளவுக்கு கோபியின் முக பாவனைகள் ரசிக்கத் தக்கதாக உள்ளது. கோபியின் கதாபாத்திரத்தில் இவருக்கு பதிலாக வேறு யாராவது நடித்திருந்தால் கண்டிப்பாக இந்த சீரியல் ரீச் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே. தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் குறித்தான சுவாரசியமான பல தகவல்கள் வெளியாகியுள்ளது. மின்சார பூவே என்கிற திரைப்படத்தில் தான் முதன் மூலமாக கோபி அறிமுகமாகியிருக்கிறார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு, எம்.ஜி.ஆர்ன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் முதலான வரலாற்று திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்த வரலாற்று திரைப்படங்களை தொடர்ந்து இருமுகன் மற்றும் தனி ஒருவன் ஆகிய திரைப்படங்களிலும் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படங்களுக்கு பிறகு தான் கோபிக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மந்திரவாசல் சீரியல் மூலமாக அறிமுகமான சதிஷ் அடுத்தடுத்து சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி முதலான சீரியல்களில் நடித்தார். இந்த சீரியலுக்கு பிறகு தான் கோபிக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் தூள் கிளப்பி கொண்டிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!