தனது மகள் லட்சுமியுடன் இணைந்த கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த திருப்பம்!
பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வினுஷா தேவி தற்போது லட்சுமியுடன் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஆரம்பத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வந்தார். பட வாய்ப்பின் காரணமாக ரோஷினி சீரியலில் இருந்து விலகினார். பின்பு, ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்கிற புதுமுக நடிகை நடிக்க ஒப்பந்தமானார். ரோஷினி மட்டும் தான் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என மீண்டும் சீரியலில் இணையும்படி கண்ணம்மாவை ரசிகர்கள் கேட்டு கொண்டனர்.
Exams Daily Mobile App Download
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ரோஷினி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். ஆரம்பத்தில் வினுஷா தேவி சீரியலில் எண்ட்ரியானதும் டிஆர்பியும் குறைய ஆரம்பித்தது. பலரும் பாரதி கண்ணம்மா தொடரினை பார்ப்பதை நிறுத்தி விட்டனர். பின்பு, சீரியல் குழுவினர்கள் சீரியல் கதையை மாற்ற ஆரம்பித்துவிட்டனர். பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு வினுஷா தேவியை ரசிகர்கள் ஏற்று கொண்டனர். தற்போது பாரதி கண்ணம்மா தொடர் டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது.
குழந்தை இல்லாத விரக்தியில் முல்லை எடுத்த திடீர் முடிவு – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி வருபவை!
வினுஷா தேவி பாரதி கண்ணம்மா தொடரில் மட்டுமல்லாமல் IT நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். இத்தனை துறைகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைப்பக்கங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்வெளியிட்டு வருகிறார். தற்போது வினுஷா தேவியும் லட்சுமியும் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.