விரைவில் ‘பிக் பாஸ்’ சீசன் 6 நிகழ்ச்சி துவக்கம்? முதல் போட்டியாளர் இவர் தான்? முழு விவரம் இதோ!

0
விரைவில் 'பிக் பாஸ்' சீசன் 6 நிகழ்ச்சி துவக்கம்? முதல் போட்டியாளர் இவர் தான்? முழு விவரம் இதோ!
விரைவில் 'பிக் பாஸ்' சீசன் 6 நிகழ்ச்சி துவக்கம்? முதல் போட்டியாளர் இவர் தான்? முழு விவரம் இதோ!
விரைவில் ‘பிக் பாஸ்’ சீசன் 6 நிகழ்ச்சி துவக்கம்? முதல் போட்டியாளர் இவர் தான்? முழு விவரம் இதோ!

கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் செய்திகளின் அடிப்படையில் கூடிய விரைவில் ‘பிக் பாஸ்’ சீசன் 6 நிகழ்ச்சி துவங்கலாம் என்றும், இந்த சீசனின் முதல் போட்டியாளராக இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்டு கலந்து கொள்ள இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 6:

விஜய் டிவியில் கடந்த 5 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ சீசன் 6 இன்னும் புது பொலிவுடன் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி இந்த ஆண்டு துவக்கத்தில் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் மக்களின் நாயகனாக அதாவது பிக் பாஸ் டைட்டில் வின்னராக ராஜு ஜெயமோகன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த சீசனும், முந்தைய 4 சீசன்களை போல அடிதடி, சண்டை மற்றும் போட்டிகளுக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்தது.

ஜூன் மாதத்தில் வங்கிகள் 6 நாட்களுக்கு மூடப்படும் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இதற்கிடையில் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் என்ற பெயரில் துவங்கப்பட்ட இதே நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த ஷோவின் வின்னராக பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்யப்பட்டார். தவிர இந்த அல்டிமேட் நிகழ்ச்சி மூலம் திரைப்பட நடிகர் சிம்புவும் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார். இப்படி ஏகப்பட்ட ஸ்வாரசியங்களுடன் முடிவுக்கு வந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிற்பாடு, கூடிய விரைவில் ‘பிக் பாஸ்’ சீசன் 6 துவங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இது உண்மையான தகவலா என்று யோசிப்பதற்குள், ‘பிக் பாஸ்’ சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் நபர்களின் பெயர்களும் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 6ல் இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்டு கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மோனிகாவை விவாகரத்து செய்த கையோடு இமான் 2வது திருமணம் செய்து கொண்டிருந்தார். இப்போது 2 குழந்தைகளுடன் தனிமையாக வசித்து வரும் மோனிகா ரிச்சர்டு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு கொண்டிருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!