காதலில் விழுந்த “பாரதி கண்ணம்மா” சீரியல் அருண் – அதுவும் “ராஜா ராணி 2” நடிகை உடனா? ரசிகர்கள் ஷாக்!

0
காதலில் விழுந்த
காதலில் விழுந்த "பாரதி கண்ணம்மா" சீரியல் அருண் - அதுவும் "ராஜா ராணி 2" நடிகை உடனா? ரசிகர்கள் ஷாக்!
காதலில் விழுந்த “பாரதி கண்ணம்மா” சீரியல் அருண் – அதுவும் “ராஜா ராணி 2” நடிகை உடனா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவின் கதாநாயகனாக நடித்து வரும் அருண் பிரசாத். பிரபல சீரியல் ஒன்றின் வில்லியாக நடித்து வரும் நடிகையை காதலிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அந்த நடிகையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அருண்:

பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரையில் TRPயில் சாதனை படைத்த முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்வார்களா என கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலில் இருந்து விலகி தற்போது வினுஷா நடித்து வருகிறார். தொடக்கம் முதல் பாரதியாக நடிகர் அருண் பிரசாத் நடித்து வருகிறார். சின்னத்திரையில் முதல் வாய்ப்பாக இருந்தாலும் அவருடைய நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

பாரதி DNA டெஸ்ட் எடுப்பாரா என தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது கதைகளம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து இருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்ய இருவருக்கும் உள்ள புரிதல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் வெண்பாவின் அம்மா ஷர்மிளா வர வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என குறிக்கோளுடன் இருக்கிறார். வெண்பாவும் வேறு வழி இல்லாமல் பாரதியை மறந்து திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்லி இருக்கிறார்.

ராதிகா பேச்சை கேட்டு பாக்கியாவை சமாதானம் செய்யும் கோபி – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதியாக இருக்கும் நடிகர் அருண் பிரசாத் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனாவை காதலிப்பது போல தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் Find Of The Year என்ற விருது வினுஷாவிற்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவிற்கு விருது கொடுக்கப்பட்டது. அப்போது வரை தொகுப்பாளர்கள் பாரதி, டாக்டர், DNA போன்ற விஷயங்களை கூறி கூறி கிண்டல் செய்தார்கள். எனவே இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் இருவரின் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!