ராதிகா பேச்சை கேட்டு பாக்கியாவை சமாதானம் செய்யும் கோபி – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

0
ராதிகா பேச்சை கேட்டு பாக்கியாவை சமாதானம் செய்யும் கோபி - சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
ராதிகா பேச்சை கேட்டு பாக்கியாவை சமாதானம் செய்யும் கோபி - சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
ராதிகா பேச்சை கேட்டு பாக்கியாவை சமாதானம் செய்யும் கோபி – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கொடுத்த நெருக்கடியால் கோபி எடுத்த முடிவும், அதனால் கோபமடைந்த எழில் பாக்கியாவை திட்டி தீர்த்த நிகழ்வும் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. மேலும், அமிர்தாவின் அளவுகடந்த சந்தோஷத்துக்கு பின்னணியில் இருக்கும் எழில் என்ன சொல்லியிருப்பார்? என்பதை குறித்தும் இப்பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைம் சீரியலில் அதிக பார்வையாளர்களை கொண்டு வரக்கூடிய எல்லா எபிசோடுகளும் ஸ்வாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இன்றைய எபிசோடில் ராதிகா கொடுத்த நெருக்கடியால் கோபியும் அவரது வீட்டுக்கு சென்று பாக்கியாவை பார்த்து நான் உன்ன ரொம்ப திட்டிட்டேன், இனிமே உன்ன ஏதும் சொல்லமாட்டேன், யோசிச்சு பார்த்தேன் உன்மேல எந்த தப்பும் இல்லை, ஆனால் பிசினஸ் பண்ண வேண்டாம்னு நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு நீ மதிப்பு கொடுத்து நடந்துகிட்ட. நீ சிரம படக்கூடாதுன்னுதான் பிசினஸ் பண்ண வேண்டாம்னு சொன்னேன். இனிமேல் உன் இஷ்டம் என்று நல்லவர் போல நடித்து விடுகிறார்.

Exams Daily Mobile App Download

உடனே ஜெனியும் பாக்கியாவை பார்த்து இதுதான் நமக்கு நல்ல சான்ஸ் விட்டு விடாதீர்கள் என கூறுகிறாள். ஈஸ்வரி கோபியே ஓகே சொல்லிட்டானே இனிமேல் உன்னுடைய பிசினசை நடத்து என கூறுகிறாள். இந்த விஷயத்தை எழிலிடம் சொல்ல அதற்க்கு எழில் நீங்க என்ன அவரு சொன்னா செய்றதுக்கும், அவரு செய்ய கூடாதுன்னு சொன்னா செய்யாம இருக்கறதுக்கும் விளையாட்டு பொம்மையா? என்று பாக்கியாவை திட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். பாக்கியாவும் தனது செல்ல மகன் திட்டியதை நினைத்து வருத்தப் படுகிறார்.

இந்த பக்கம் ராதிகா, கோபியிடம் என்னாச்சு? பேசுனீங்களா? என்ன சொன்னாங்க? பாக்கியா ஹஸ்பண்டை பார்த்திங்களா? என்று ஒரு பதில் சொல்வதற்குள் ஆயிரம் கேள்வியை தொடர்ந்து அடுக்கினார். கோபியும் எல்லாம் நல்லபடியா முடிந்தது என்று சொன்ன அடுத்த கணம் பாக்கியாவுக்கு போன் செய்தார் ராதிகா. பாக்கியாவும் எடுத்தவுடன் தன்னுடைய கணவர் பிசினசை நடத்த சொல்லிட்டாரு என்ற விஷயத்தை சந்தோசத்துடன் சொல்கிறாள். ராதிகா அதற்குக் காரணம் நான்தான் என்று சொல்ல வருவதற்குள் கோபி அதை வேண்டாம் என்று தடுத்து விடுகிறான்.

ஜீ தமிழில் புது சீரியலில் களமிறங்கும் ‘பாக்கியலட்சுமி’ நடிகர் ஆர்யன் – கதாநாயகி யார் தெரியுமா?

அதன் பிறகு எழில், அமிர்தாவின் அம்மா, அப்பாவை காண அவர்களது வீட்டுக்கு செல்கிறார். அங்கு அமிர்தா எதோ ஒன்றை யோசித்து கொண்டு சோகமாக அமர்ந்திருக்க, எழில் அவளை பார்த்து என்னாச்சு? ஏன் சோகமா இருக்க?என்று கேட்கிறார். அதற்க்கு அமிர்தாவும் ஒன்னுமில்லை என்று சமாளிக்கிறார். ஆனாலும் தனது காதலியின் கோபத்தை கண்ணில் அறிந்த காதலனாக எழில், அமிர்தாவை பார்த்து இந்த ஜென்மத்துல எழில் என்ற பையன் அமிர்தா என்ற பொண்ண தவிர வேறு எந்த பொண்ணையும் நினைச்சுக் கூட பார்க்க மாட்டான் என கூறியதை கேட்டு கேட்டு அமிர்தா உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here