விரைவில் திருமண பந்தத்தில் இணையும் “பாரதி கண்ணம்மா” அருண் – வைரலாகும் தகவல்!

0
விரைவில் திருமண பந்தத்தில் இணையும்
விரைவில் திருமண பந்தத்தில் இணையும் "பாரதி கண்ணம்மா" அருண் - வைரலாகும் தகவல்!
விரைவில் திருமண பந்தத்தில் இணையும் “பாரதி கண்ணம்மா” அருண் – வைரலாகும் தகவல்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியாக நடித்து வரும் அருண் அவர்களுக்கு விரைவில் பிரபல சீரியல் வில்லியுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழுவிவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் வரிசையில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் லீட் ரோலில் டாக்டர் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அருண் பிரசாத். இவர் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். தொடக்கம் முதல் பாரதி ரோலில் நடித்து வரும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர். இந்நிலையில் அருண் பிரசாத் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னதாக மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் நண்பராகவும் நடித்திருக்கிறார்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இனி நேர்முகத்தேர்வு கிடையாது – ஆசிரியர் தகுதி வாரியம் அறிவிப்பு!

அதன் மூலமாக தான் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. பாரதியாக நடிக்கும் அருண், விஜய் டிவியில் மற்றொரு டாப் சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா உடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியானது. அதற்கு காரணம் விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் அர்ச்சனா விருது வாங்கும் போது ஈரோடு மகேஷ் அவரை டாக்டர், DNA டெஸ்ட் என கலாய்த்த வீடியோ தான். மேலும் சமூக வலைத்தளங்களில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வைரலானது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இருவரும் இது குறித்து பதில் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். தற்போது அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனாவுக்கு நிச்சயம் முடிந்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து அவர்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை. அர்ச்சனா அல்லது அருண் இந்த தகவலுக்கு பதில் அளித்தால் தான் உறுதியான தகவல் ரசிகர்களுக்கு தெரிய வரும். அவர்களின் விளக்கத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!