பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

0
பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

இந்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு தகவல் :

இந்திய அரசால் பாரத பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இயக்கப்பட்டு வருகிறது. இது ஒரு எண்ணெய் மற்றும் வளிமம் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைமையகம் மும்பை, மகாராஷ்டிராவில் உள்ளது. அத்துடன் பாரத பெட்ரோலியம் கொச்சி மற்றும் மும்பையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இயங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனத்தில் Junior Executive பணியிடத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பிப்ரவரி 1 முதல் இரவு ஊரடங்கு ரத்து, புதிய தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!

இப்பணிக்கு பிப்ரவரி 1ம் தேதி நிலவரப்படி 45 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு உள்ளிட்ட முறைகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணியில் நியமிக்கபடுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் 1,20,000 லட்ச ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கல்லூரி, பல்கலை பேராசிரியர்களுக்கு ஜாக்பாட் – அறிவிக்குமா அரசு?

இப்பணிக்கு  https://www.bharatpetroleum.i/ என்ற இணையதள முகவரி மூலமாக பிப்ரவரி 7ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து முடிக்க வேண்டும்.  அத்துடன் இப்பணியில் குறைவான எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் இருப்பதால் விண்ணப்பதாரர்கள் அனைவரும் விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://www.bharatpetroleum.in/images/files/Juinor%20Executive%20(Aviation)-Detailed%20Ad-Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!