இதயத்தை கொண்டு வந்த பாரதிக்கு வரும் சிக்கல், கண்ணம்மாவின் சூப்பர் திட்டம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
இதயத்தை கொண்டு வந்த பாரதிக்கு வரும் சிக்கல், கண்ணம்மாவின் சூப்பர் திட்டம் - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இதயத்தை கொண்டு வந்த பாரதிக்கு வரும் சிக்கல், கண்ணம்மாவின் சூப்பர் திட்டம் - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இதயத்தை கொண்டு வந்த பாரதிக்கு வரும் சிக்கல், கண்ணம்மாவின் சூப்பர் திட்டம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், சமூக கருத்துக்களை மையமாக வைத்து கதை கொண்டு செல்லப்படுகிறது. சக்திக்கு நல்லபடியாக ஆப்ரேசன் நடக்குமா என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்க, இதயத்தை கொண்டு வரும் பாரதிக்கு பெரிய சிக்கல் வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்:

பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை 700 எபிசோடுகளாக குடும்பக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது குடும்பக் கதையை காட்டாமல் சமூக அக்கறையை மையமாக வைத்து கதை கொண்டு செல்லப்படுகிறது. சக்தி என்ற சிறு குழந்தைக்கு உடம்பு சரி இல்லாமல் போக அவளுடைய உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையால் பாரதியும், கண்ணம்மாவும் பல முயற்சிகளை செய்கின்றனர். அதன் முடிவில் சக்திக்கு இதயம் கிடைக்கிறது.

நெஞ்சுவலியை காரணம் சொல்லி வராமல் தப்பித்த கோபி, ராதிகாவுக்கு வந்த சந்தேகம் – “மகா சங்கமம்” சீரியலில் திடீர் திருப்பம்!

ஆனால் அதை சென்னைக்கு கொண்டு வருவது பெரிய சவாலாக இருக்கிறது. முதலில் கண்ணம்மாவை நம்பாத பாரதி கணேஷ் பேச்சை கேட்டு ஹெலிகாப்டர் மூலமாக இதயத்தை கொண்டு செல்ல திட்டமிடுகிறார். ஆனால் கண்ணம்மா சொன்னது போல இயற்கை சதி செய்ய அதனால் இதயத்தை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் கண்ணம்மா முன்னெச்சரிக்கையாக செய்து வைத்த திட்டத்தால் ரோடு வழியாக இதயத்தை கொண்டு செல்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அப்போதும் இயற்கை சதி செய்ய பாரதி வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிக் கொள்கிறது. அதனால் என்ன செய்வது என தெரியாமல் பாரதி மனம் உடைந்து இருக்கிறார். அப்போது கண்ணம்மா ஆம்புலன்சில் வர பாரதியும், கண்ணம்மாவும் கிளம்புகின்றனர். கண்ணம்மா மீது பாரதிக்கு இனிமேல் பெரிய மரியாதை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் இருவரும் நெருக்கமாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!