
இதயத்தை கொண்டு வர கண்ணம்மா போட்ட மாஸ்டர் பிளான், ஆச்சர்யத்தில் பாரதி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து சக்திக்கு இதயத்தை கொண்டு வர பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இதயம் கொண்டு வரும் நாளில் கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் பெரிய திருப்பம் வர இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது சமூக விழிப்புணர்வு குறித்த கதை கொண்டு வரப்பட்டுள்ளது. பாரதி கண்ணம்மா வேலை செய்யும் மருத்துவமனையில் சக்தி என்ற குழந்தையின் உடல்நிலை மோசமாக இருக்க அதனை சரி செய்ய மருத்துவ குழு பல முயற்சிகளை செய்து வருகின்றனர். சக்திக்கு இதயம் கிடைக்காமல் இருக்க, பல முயற்சிகளை செய்து பொருத்தமான இதயத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அந்த குழந்தையின் பெற்றோர் இதயத்தை கொடுக்க மறுக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம்? ரசிகர்கள் ஷாக்!
அப்போது கண்ணம்மாவின் நடவடிக்கையால் குழந்தையின் பெற்றோர் இதயத்தை கொடுக்க சம்மதிக்கின்றனர். இந்நிலையில் இதயத்தை கொண்டு வர ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் பாரதிக்கு கண்ணம்மா வருவது பிடிக்காமல் இருப்பதால் பொறுப்புகளை கணேஷிடம் ஒப்படைகின்றனர். கணேஷ் கண்ணம்மாவை மட்டம் தட்ட வேண்டும் என்பதால் இதயத்தை நல்லபடியாக கொண்டு வர வேண்டும் என திட்டமிடுகிறார். ஆனால் கண்ணம்மாவிற்கு அவருடைய திட்டம் பிடிக்காமல் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இதயத்தை கொண்டு வரும் நாள் அன்று கணேஷ் சொன்னது போல விமானம் தயாராக இருக்கிறது. ஆனால் அன்று மழை பெய்ததால் விமானத்தை இயக்க முடியவில்லை. அதனால் பாரதி என்ன இப்படி செய்துவிட்டீர்கள் என சொல்ல அதை கேட்டு கண்ணம்மா எல்லாம் நல்லபடியாக பண்ணியாச்சு என சொல்கிறார். அவர் ரோடு வழியாக வர ஏற்பாடு செய்து இருப்பதாக சொல்கிறார். அதனால் சக்தியின் ஆப்ரேசன் நல்லபடியாக முடிகிறது.