பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம்? ரசிகர்கள் ஷாக்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம்? ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம்? ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம்? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் ஐந்துக்குள் இடம் பெற்று ஹிட் சீரியல் ஆக வலம் வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் முக்கிய பங்காக இருக்கும் கண்ணம்மா ரோலில் நடித்து பிரபலமாகிய ரோஷினி தற்போது கூறிய தகவல் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

பாரதி கண்ணம்மா ரோஷினி:

விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியலுக்கு பஞ்சமில்லாத வகையில் புது புது சீரியல்களை கூட அதன் கதைக்களத்தால் டாப் சீரியல் ஆக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வரிசையில் நல்ல கதைக்களத்துடன் ஆரம்பமாகி தொடக்கத்தில் இருந்தே நல்ல பெயரை கொண்டு நிலை நிற்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இடையில் பல விமர்சனங்களை பெற்று வந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்பதில் மட்டும் ஆர்வம் குறையாமல் பார்வையாளர்கள் ஆதரித்து வருகிறார்கள்.

கோபி போனில் பேசுவது யார் என கண்டுபிடித்த ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் பாக்கியா – மகா சங்கமம் சீரியலில் திடீர் திருப்பம்!

இவ்வாறு நல்ல அம்சங்களை கொண்ட சீரியலில் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது கண்ணம்மாவும், பாரதியும் தான். இருவரும் சேர்வார்கள் என்பது தான் கதையின் முடிவு ஆனால் எப்படி சேர்வார்கள்? எப்போது சேர்வார்கள் என்பது தான் கதையில் தொடர்ச்சியாக நகர்ந்து நாளுக்கு நாள் புது புது திருப்பங்களையும், புது முகங்களையும் இந்த தொடர் அறிமுகப்படுத்தி வருகிறது. இவ்வாறு கண்ணம்மாவாக அறிமுகமாகிய ரோஷினி இந்த சீரியல் மூலம் பிரபலமாகினார் என்பதில் எந்த ஒரு கேள்விக்குறியும் இல்லை. அந்த அளவுக்கு ரீச் கண்ணம்மாவாக ரோஷினிக்கு கிடைத்தது.

Exams Daily Mobile App Download

ஆனால் ரோஷினி வெள்ளித்திரையில் நுழைய முயற்சிகள் மேற்கொள்ள ஆர்வம் காட்டியதால் சீரியலை விட்டு விலகினார். தற்போது அவருக்கு பதிலாக கண்ணம்மாவாக புது முக நடிகை வினுஷா நடித்து கதைக்களத்துக்கு பொருந்தி விட்டார். சீரியலை விட்டு விலகிய ரோஷினி பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியின் போட்டியாளராக களம் இறங்கி மாஸ் காட்டிவருகிறார். சீரியலை விட்டு விலகினாலும் அவரை பற்றி நியூஸ் வராத நாளே இல்லை. அதாவது ரோஷினி கண்ணம்மாவாக இந்த சீரியலில் முதலில் நடிக்க தேர்வாகவில்லையாம். முதன் முதலில் கண்ணம்மாவாக நடிக்கவிருந்தது பவித்ரா ரெட்டி என்பவர் தானாம். இதை அறிந்த ரசிகர்கள் பவித்ரா ரெட்டி யாராக இருக்கும் என்று தேடுவதில் பிஸியாக உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!