கோபியிடம் இனிமேல் ஒழுங்காக இருக்க சொல்லும் ஈஸ்வரி, ராதிகாவை சந்திக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியிடம் இனிமேல் ஒழுங்காக இருக்க சொல்லும் ஈஸ்வரி, ராதிகாவை சந்திக்கும் கோபி - இன்றைய
கோபியிடம் இனிமேல் ஒழுங்காக இருக்க சொல்லும் ஈஸ்வரி, ராதிகாவை சந்திக்கும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியிடம் இனிமேல் ஒழுங்காக இருக்க சொல்லும் ஈஸ்வரி, ராதிகாவை சந்திக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி கூப்பிட்டும் பாக்கியா வராததை நினைத்து ஈஸ்வரி வருத்தப்படுகிறார். பின் கோபி ராதிகாவை சந்தித்து மும்பை போக வேண்டாம் என கெஞ்சி சொல்கிறார். இன்னும் திருந்தாமல் ராதிகாவுடன் வாழ நினைக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி இனியாவிற்கு தோசை சுட்டு கொடுக்க அது கருகி இருக்கிறது. என்ன அக்கா இது இப்படி இருக்கிறது என இனியா கேட்க ஒன்று கருகிவிடுகிறது. இல்லை என்றால் பிஞ்சு வருகிறது என ஜெனி சொல்கிறார். பின் அண்ணனை எதாவது வாங்கி வர சொல்லுங்கள் என இனியா சொல்ல ஆன்டி என்னை தான் பார்த்துக் கொள்ள சொன்னார்கள் என ஜெனி சொல்கிறார். பின் ஜெனி இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக் கொள் என சொல்கிறார்.

அப்போது செழியன் கோபியை அழைத்து கொண்டு வருகிறார். கோபி எனக்கு சாப்பாடு வேண்டாம் என சொல்கிறார். ஈஸ்வரியை சாப்பிட சொல்ல இனியா கருகி போன தோசையை எப்படி சாப்பிடுவது என கேட்கிறார். ஜெனி இன்னைக்கு ஒரு நாள் சாப்பிட சொல்கிறார். பின் கோபி ஈஸ்வரியிடம் சாரி கேட்கிறார். அப்போது ஈஸ்வரி நான் அதை பற்றி இனி பேச விரும்பவில்லை என சொல்கிறார். இனிமேல் ஒழுங்காக இருக்க வேண்டும் என ஈஸ்வரி சொல்கிறார். பின் உன் அப்பா பாக்கியாவை கூப்பிட சென்று இருக்கிறார் என ஈஸ்வரி சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இனியா கூப்பிட்டும் வரவில்லை நான் கூப்பிட்டும் வரவில்லை உன் அப்பா கூப்பிட்டால் கண்டிப்பாக வருவாள் அவள் வந்து கொஞ்சம் சோகமாக தான் இருப்பாள், நீ தான் பொறுத்து போக வேண்டும். இந்த குடும்பம் இப்படி இருக்க அவ தான் காரணம் பசங்க பொறுப்புடன் இருக்க அவ தான் காரணம் இதான் உன் வாழ்க்கை அதை ஏற்றுக் கொண்டு நீ வாழ தான் வேண்டும். அந்த ராதிகா ஊரை விட்டு சென்று இருப்பாள் இனிமேல் அவள் பக்கம் நீ திரும்ப கூடாது என சொல்ல கோபி சரி என சொல்கிறார். பின் தாத்தா வர பாக்கியா நான் கூப்பிட்டும் வரவில்லை என சொல்கிறார்.

இனியா அம்மா வராமல் நாளை நான் ஸ்கூல் போகமாட்டேன். எல்லாம் நீங்க செய்ததால் தான் டாடி என சொல்கிறார். பின் செழியன் அம்மா செய்வது ரொம்ப அதிகமாக இருக்கிறது என சொல்ல பின் ஈஸ்வரி பாக்கியா மீது கோவப்படுகிறார். உங்க மகளாக இருந்தால் இப்படி செய்வீர்களா என கேட்கிறாள் நான் என்ன செய்வது என தாத்தா சொல்ல ஈஸ்வரி அதை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் கோபி ராதிகாவை சந்திக்க வருகிறார். ராதிகா எதற்கு என்னை வர சொன்னீங்க என கேட்க கோபி உன்னிடம் பேச வேண்டும் என சொல்கிறார்.

இந்த மொத்த பிரச்சனையும் உங்களால் வந்தது என சொல்ல கோபி பழசை பற்றி பேச வேண்டாம் என சொல்கிறார். ஆனால் ராதிகா இதெல்லாம் புது பிரச்சனை என சொல்கிறார். பின் டீச்சர் என்னை பார்க்க வந்ததாக சொல்ல என்ன செய்தால் சண்டை போட்டாளா என கோபி கேட்கிறார். ஆமாம் என்னை நிக்க வச்சு கேள்வி கேட்டார்கள் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை என சொல்ல கோபி அவளுக்கு கொழுப்பு என சொல்கிறார். பின் ராதிகா அவங்க செய்தது சரி தான் நான் இருந்தால் அதை விட அதிகமாக சண்டை போடுவேன் என சொல்கிறார்.

உங்களுக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியும் ஆனால் டீச்சர் தான் உங்க மனைவி என தெரிந்தால் நான் விலகி இருப்பேன் என சொல்ல, கோபி எல்லாம் சரியாகி விடும் என சொல்கிறார் . உங்க குடும்பத்தை பற்றி பொய் தான சொன்னீங்க என சொல்ல ராதிகா எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும் நீ மும்பை போற திட்டத்தை தள்ளி வை என சொல்கிறார். தள்ளி வைத்து என்ன ஆக போகுது என ராதிகா கேட்க நாளைக்கு எனக்கு கேஸ் வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? வலுக்கும் போராட்டம்!

பாக்கியா என்ன முடிவு செய்வாள் என எனக்கு தெரியாது ஆனால் உன்னுடன் இருந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் எப்பவும் போல உன்னுடன் இருக்கேன் என சொல்கிறார். அப்போ பாக்கியா என்னனு என்னிடம் கேட்காதே ஆனால் நீ இருந்தால் தான் நான் சந்தோசமாக இருப்பேன், நீ இங்கையே இருந்தால் எனக்கு சந்தோசமாகவும், நிம்மதியாக, ஆறுதலாக இருக்கும் என சொல்ல ராதிகா நான் கிளம்புறேன் என சொல்லி கிளம்புகிறார். கோபி ராதிகா என கெஞ்சி கேட்க கோபி எதுவும் பேசாமல் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!