அமிர்தா அப்பாவை அடித்த ரவுடிகள், இனியாவிடம் இரண்டாவது திருமணம் பற்றி சொன்ன கோபி – இன்றைய எபிசோட்!

0
அமிர்தா அப்பாவை அடித்த ரவுடிகள், இனியாவிடம் இரண்டாவது திருமணம் பற்றி சொன்ன கோபி - இன்றைய எபிசோட்!
அமிர்தா அப்பாவை அடித்த ரவுடிகள், இனியாவிடம் இரண்டாவது திருமணம் பற்றி சொன்ன கோபி - இன்றைய எபிசோட்!
அமிர்தா அப்பாவை அடித்த ரவுடிகள், இனியாவிடம் இரண்டாவது திருமணம் பற்றி சொன்ன கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தாவை வம்பிழுத்த ரவுடிகள் அமிர்தா அப்பாவை அடித்துவிடுகின்றனர். பின் பாக்கியாவும் கோபியும் இனியாவை பள்ளியில் சேர்க்க வருகின்றனர். அப்போது பாக்கியாவிற்கு எதுவும் தெரியாமல் இருப்பதால் கோபி இனியாவிடம் வேறு திருமணம் செய்ய போகிறேன் என மறைமுகமாக சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் அமிர்தாவும் அவரது அப்பாவும் கடைக்கு சென்றுவிட்டு வரும் போது ரவுடிகள் வழிமறைத்து அமிர்தாவை வம்பிழுக்கின்றனர். அப்போது அமிர்தா அப்பா அதை கேட்க போக அவரை தள்ளி விட்டு ரவுடிகள் அட்டகாசம் செய்கின்றனர். அப்போது சுத்தி இருப்பவர்கள் உதவி செய்து அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். மறுபக்கம் கோபி இனியாவை ஸ்கூல் சேர்க்க ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு செல்கிறார். அப்போது பாக்கியாவும் வர ஸ்கூலில் இனியாவின் நண்பர்களிடம் படிப்பு பற்றி புரியாமல் பேசுகிறார். அப்போது இனியா இந்த அம்மாவிற்கு ஒன்றும் தெரியவில்லை என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அமிர்தா வீட்டில் அப்பாவிற்கு அடிபட்டதை நினைத்து வருத்தமாக இருக்கின்றனர். அப்போது அமிர்தாவின் அம்மா இப்படி தெரியாத ஊரில் வந்து இருந்து கேட்பதற்கு யாரும் இல்லாமல் இருக்கிறோம் என சொல்கிறார். நாம நம்ம ஊருக்கே சென்றுவிடலாம் என சொல்ல, அமிர்தா படிப்பிற்காக இங்கே வந்தோம் ஆனால் இப்படி ஆகிவிட்டது என சொல்கிறார். அப்போது எழில் போன் செய்ய அமிர்தா வெளியே வந்து பேசுகிறார். கொஞ்சம் தயங்கி தயங்கி பேச எழில் எதாவது பிரச்சனையா என கேட்கிறார். அமிர்தா எதுவும் சொல்லாமல் போனை வைத்துவிடுகிறார்.

பின் இனியா வேலைகளை முடித்துவிட்டு கோபியை வெளியே சாப்பிட அழைத்து செல்ல சொல்கிறார். அப்போது பாக்கியா வீட்டில் சமைத்து வைத்திருக்கேன் என சொல்ல, நீ சென்று சாப்பிடு என சொல்கிறார். பின் கோபி கிளம்ப ஆட்டோவில் சென்றுவிட்டு என கோபி சொல்கிறார். பின் இனியாவும் கோபியும் ஹோட்டலில் சாப்பிட இனியா இந்த அம்மா ஏன் இப்படி இருக்கிறார். என் நண்பர்கள் முன்னால் என் மானமே போனது என சொல்கிறார். எனக்கும் மாடல் அம்மா இருந்தால் நன்றாக இருக்கும் என இனியா சொல்கிறார்.

அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைய அப்பா வேறு திருமணம் செய்து கொள்ளவா என கேட்கிறார். இனியா அதை கேட்டு அதிர்ச்சி அடைய, சரி பண்ணிக்கோங்க என விளையாட்டாக பேசுகிறார். என்னை கிண்டல் செய்ய கூடாது என சொல்லிவிட்டு நீங்க கிண்டல் செய்கிறீர்கள் என கேட்கிறார். பின் இனியாவிடம் நானும் அம்மாவும் பிரிந்துவிட்டால் நீ யாருடன் இருப்ப என கேட்க, அதில் என்ன சந்தேகம் நான் உங்களுடன் தான் இருப்பேன் என இனியா சொல்கிறார். ஆமாம் எப்போ பிரிய போறீங்க என நக்கலாக சொல்கிறார்.

முல்லைக்காக புது வீடு திட்டத்தை தள்ளி வைக்கும் மூர்த்தி, வருத்தப்படும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் பாக்கியா வீட்டிற்கு வர ஈஸ்வரி இனியா எங்கே என கேட்கிறார். அவள் வெளியே சாப்பிட சென்றிருக்கிறார் என சொல்ல, ஈஸ்வரி வீட்டில் செய்து வைத்துள்ளது எல்லாம் வீணாகிவிடும் என சொல்கிறார். பின் பாக்கியாவை நீயும் சாப்பிட்டு இருக்கலாம் என சொல்ல, செல்வி சாருக்கு தான் கூட்டிக் கொண்டு போக பிடிக்காது என சொல்கிறார். ஈஸ்வரி உன்னை கொண்டு வந்து விட்டு போனார்களா என கேட்க, இல்லை நான் ஆட்டோவில் வந்தேன் அவர் விடுகிறேன் என்று தான் சொன்னார் என சொல்கிறார். பின் பாக்கியா நடந்ததை நினைத்து வருத்தமாக இருக்கிறார்.

அமிர்தா வர நாம ஊருக்கு சென்றுவிடலாம் என சொல்கிறார். அப்போது எழில் வர, என்னாச்சு என கேட்கிறார். அப்போது அமிர்தாவின் அம்மா எல்லாம் தெரிந்து தான் வந்துருக்கியா என கேட்க இல்லை அமிர்தாவின் குரல் சரியில்லாமல் இருந்ததாக சொல்கிறார். அப்போது அமிர்தாவை சில பசங்கள் கேலி செய்கிறார்கள் அதை கேட்க சென்ற அப்பாவை முடித்துவிட்டார்கள் என சொல்ல எழில் அப்பாவை சென்று பார்க்கிறார். இதெல்லாம் என்னிடம் சொல்ல வேண்டாமா என கேட்க, அமிர்தாவை அழைத்துக் கொண்டு எழில் கிளம்புகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!