
புது வீடு திட்டத்தை கைவிட்ட குடும்பம், வீட்டை விட்டு வெளியேறிய மீனா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லைக்கு குழந்தை பிறக்க மருத்துவரிடம் டிரீட்மென்ட் எடுக்க குடும்பத்துடன் முடிவு செய்துள்ளனர். அதனால் மூர்த்தி புது வீடு வாங்கும் திட்டத்தை தள்ளி போட முடிவு செய்துள்ளார். அதனால் மீனா கோவமாக இருக்க வீட்டை விட்டு கிளம்ப முடிவு செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தான் புது கடை கட்டி குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கும் நேரத்தில், முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மை தெரிய வந்துள்ளது. அதனால் உடைந்து போன குடும்பம் சோகத்தில் இருக்கிறது. விரக்தியில் இருக்கும் முல்லைக்கு உடனே மருத்துவம் பார்த்து குழந்தை பிறக்க வேண்டும் என தனம் முடிவு செய்ய மூர்த்தியிடம் அது பற்றி சொல்கிறார். மூர்த்தி முல்லைக்கு சீக்கிரமாக நல்லது நடக்க வேண்டும் என சொல்கிறார்.
TN Job “FB
Group” Join Now
பின் தனம் மருத்துவமனைக்கு முல்லை கதிரை அழைத்து செல்ல அங்கே செயற்கை முறையில் குழந்தை பிறக்க வழி இருப்பதாக சொல்கிறார். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும் என டாக்டர் சொல்ல தனம் எதுனாலும் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். இது பற்றி மூர்த்தியிடம் பேச புது வீடு இப்போதைக்கு வேண்டாம் என முடிவு செய்கின்றனர். ஆனால் மீனா புது வீடு வேண்டும் என பல கனவுகளுடன் இருக்க, முல்லைக்கு சில வருடம் கழித்து டிரீட்மென்ட் பார்க்கலாம் என சொல்கிறார்.
அமிர்தா அப்பாவை அடித்த ரவுடிகள், இனியாவிடம் இரண்டாவது திருமணம் பற்றி சொன்ன கோபி – இன்றைய எபிசோட்!
ஆனால் அதை யாரும் கேட்பதாக இல்லை அதனால் மீனா கோவமாக இருக்க ஐஸ்வர்யாவிடம் அவங்க கடைசி வரை இதே வீட்டில் தான் நம்மளை வைத்திருக்க போகிறார்கள் என சொல்லி வருத்தப்படுகிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்க அடுத்து வர போகும் எபிசோடுகளில் முல்லைக்கு மருத்துவ செலவுகள் அதிகமாக வருகிறது அதெல்லாம் பார்த்து மீனாவிற்கு பிடிக்காமல் ஜீவாவுடன் அடிக்கடி சண்டை போடுகிறார். கடைசியில் அவர் நான் வீட்டை விட்டு கிளம்புகிறேன் புது வீடு வாங்கிய பின் வருகிறேன் என சொல்கிறார்.