முல்லைக்காக புது வீடு திட்டத்தை தள்ளி வைக்கும் மூர்த்தி, வருத்தப்படும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
முல்லைக்காக புது வீடு திட்டத்தை தள்ளி வைக்கும் மூர்த்தி, வருத்தப்படும் மீனா - இன்றைய
முல்லைக்காக புது வீடு திட்டத்தை தள்ளி வைக்கும் மூர்த்தி, வருத்தப்படும் மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
முல்லைக்காக புது வீடு திட்டத்தை தள்ளி வைக்கும் மூர்த்தி, வருத்தப்படும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா பெயரில் அனைத்து கணக்குகளையும் மாற்றி வைக்கிறேன் என ஜனார்த்தனன் சொல்கிறார். பின் மூர்த்தி வீடு கட்டும் திட்டத்தை கொஞ்ச நாளைக்கு தள்ளி போட்டு முல்லைக்கு டிரீட்மென்ட் பாப்போம் என சொல்கிறார். முல்லை கதிர் அதை நினைத்து வருத்தப்படுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் இனிமேல் உங்களது பெயரில் எல்லா கணக்குகளையும் மாத்தி விடுகிறேன் என சொல்ல, இருந்தாலும் மாமா அதெல்லாம் வேண்டாம் என ஜீவா சொல்கிறார். ஆனால் ஜனா நான் முடிவு செய்துவிட்டேன் இனிமேல் மாற்ற முடியாது என சொல்லி பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறார். இதை அவரிடம் கொடுத்துவிடுங்கள் இனிமேல் நீங்களே சென்று பேங்க்கில் எடுங்கள் என சொல்கிறார். பின் ஜீவா மாமா நம்ம மீது பாசம் வைத்திருப்பது எல்லாம் சரி தான் ஆனால் இதையே சாக்காக வைத்து நம்மை இங்கையே இருக்க வைப்பார் போல என நினைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் கதிர் கடையில் சில்லறை இல்லாமல் இருக்க, மூர்த்தி சில்லறை கொடுத்து சில்லறை மாற்றி வைக்க சொல்கிறார். கதிர் கிளம்ப முல்லையின் அப்பா வருகிறார் அவர் சில்லறை கொடுக்க, அதில் காசு கம்மியாக இருக்கிறது என சொல்கிறார். பின் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என சொல்ல, கதிர் 2000 ரூபாய்யை கொடுக்கிறார். பின் முல்லையை பற்றி கவலையாக இருப்பதாக சொல்கிறார். மருத்துவமனைக்கு சென்று வந்ததாக சொன்னார்கள் என கேட்க, அதெல்லாம் குழந்தை பிறந்துவிடும் என சொன்னார்கள் என சொல்கிறார். பின் செலவு அதிகமாகுமாம் என சொல்ல, மூர்த்தி எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.

எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை, இந்த கடையை திறக்கவே எவ்வளவு செலவாகி இருக்கும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை உங்களுக்கு தேவை இல்லாமல் கஷ்டம் என சொல்கிறார். அவர் வருத்தப்பட மூர்த்தி முல்லை நம்ம வீட்டு பிள்ளை என சொல்கிறார். பார்வதிக்கும் மாப்பிள்ளை தான் செலவு செய்தார் என சொல்கிறார். பின் மூர்த்தி அனைவரையும் அழைத்து முல்லையும் கதிரும் மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கே சில டிரீட்மென்ட் மூலமாக குழந்தை பிறக்கும் என சொல்லி இருக்காங்க, அதனால் இப்போதைக்கு புது வீடு திட்டத்தை தள்ளி வைக்கலாம் என சொல்கிறார்.

Reliance Jio, Airtel வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.300க்குள் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

பின் எல்லாரும் பரவாயில்லை என சொல்ல மீனா மட்டும் வருத்தமாக இருக்கிறார். கதிர் எல்லாரும் சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். எல்லாரும் எங்களுக்காக கஷ்டப்பட வேண்டும் என சொல்ல, ஜீவா வந்து ஆறுதல் சொல்கிறார். அப்போது கதிர் அவருடன் வருத்தப்பட்டு பேச, ஆனால் தனம் வந்து உடனே முல்லையை சரி செய்ய வேண்டும் என சொல்கிறார். பின் முல்லை அரசு மருத்துமனையில் இலவசமாக எதாவது பார்க்கிறார்களா என பார்த்துக் கொண்டிருக்கிறேன் என சொல்ல, அதெல்லாம் தேவை இல்லை நாம சந்தோசம் தான் முக்கியம் என சொல்கிறார். இப்போது சரியாக தான் சென்று கொண்டிருக்கோம் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here