கோபிக்கு விவாகரத்து கொடுக்க கிளம்பிய பாக்கியா, வருத்தத்தில் இருக்கும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

0
கோபிக்கு விவாகரத்து கொடுக்க கிளம்பிய பாக்கியா, வருத்தத்தில் இருக்கும் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
கோபிக்கு விவாகரத்து கொடுக்க கிளம்பிய பாக்கியா, வருத்தத்தில் இருக்கும் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
கோபிக்கு விவாகரத்து கொடுக்க கிளம்பிய பாக்கியா, வருத்தத்தில் இருக்கும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபிக்கு விவாகரத்து கொடுக்க இருப்பதாக முடிவு செய்கிறார். பின் குடும்பத்தினர் பல முறை கெஞ்சியும் கேட்காமல் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். அதனால் கோவப்பட்ட கோபி பாக்கியாவிற்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்கிறார்

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபியிடம் என்னிடம் நீங்க விவாகரத்து தான கேட்டீங்க அதை கொடுக்க நான் முடிவு செய்துவிட்டேன் இந்த வாழ்க்கையில் இருந்து விலகி போக முடிவு செய்ததாக சொல்கிறார். உங்க மனைவியாக உங்களை டாச்சர் செய்தேன், என்னை நினைத்தால் உங்களுக்கு அவமானமாக தான இருந்தது என பாக்கியா கேட்கிறார். இனிமேல் உங்க கூட இருந்து நீங்க என்ன செய்ய போறீங்க, என்ன நினைப்பீங்க என நான் பார்க்க போறதில்லை என சொல்ல, செழியன் இது போல விஷயத்தை செய்தால் நான் பேசவே மாட்டேன் என சொல்கிறார்.

எழில் வா போகலாம் என பாக்கியா சொல்ல, செழியன் நான் பேசமாட்டேன் என சொல்கிறேன் நீ என்ன இப்படி செய்கிறாய் என கேட்கிறார். நீ பேசாவிட்டால் போ என எழில் சொல்கிறார். பின் இனியா என்னை விட்டு போனால் நான் உன்னுடன் வரமாட்டேன். எனக்கு டாடி முக்கியம் என சொல்ல, ஈஸ்வரி இது குடும்பம் என் மீது மரியாதை இருந்தால் இதை நீ செய்ய கூடாது என சொல்கிறார். உங்க மீது எனக்கு மரியாதை இருக்கிறது அத்தை ஆனால் இதை நான் செய்யாமல் இருந்தால் நான் செத்து போவதற்கு சமம் என பாக்கியா சொல்கிறார். உங்க மீது மரியாதை பொறுப்பு எல்லாம் இருக்கிறது ஆனால் இன்னைக்கு நான் போக வேண்டும் என பாக்கியா கிளம்புகிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் பாக்கியா தாத்தாவிடம் எனக்கு வேற வழி இல்லை என சொல்லிவிட்டு வேகமாக வெளியே செல்கிறார், எழில் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மறுபக்கம் குடும்பத்தில் அனைவரும் கோவமாக இருக்கின்றனர். செல்வி அடுத்து என்ன நடக்க போகிறது என தெரியாமல் இருப்பதாக சொல்கிறார். அக்கா இனி என்ன செய்ய போகிறார் என தெரியவில்லை என செல்வி சொல்கிறார். ஆனால் அக்கா எடுத்த முடிவு தான் சரியானது என சொல்கிறார். ஜெனி, ஆன்டி எடுத்தது சரியான முடிவு தான் ஆனால் ஆன்டி இல்லாமல் குடும்பத்தில் என்ன ஆகும் என சொல்லி வருத்தப்படுகிறார்.

மறுபக்கம் கோபி எவ்வளவு திமிரு அவளுக்கு எனக்கு விவாகரத்து கொடுக்க போறியா எல்லார் முன்னாடியும் எத்தனை கேள்வி கேட்டாள் அதை எல்லாம் பொறுத்து கொண்டு நான் என் தவறை உணர்ந்தால் அவள் எனக்கு விவாகரத்து கொடுக்க போகிறாள், என கோவமாக சொல்லி, வக்கீலுக்கு போன் செய்து நான் வருகிறேன் என சொல்கிறார். மறுபக்கம் இனியா அழுது கொண்டு இருக்க ஈஸ்வரி அவன் தான் தவறாக முடிவு செய்தால் இவளும் அப்படி முடிவு செய்வாளா எதோ மளிகை கடைக்கு போகிற மாதிரி என சொல்ல, செல்வி முதலில் உங்க பையன் தான் முடிவு செய்ததாக சொல்கிறார்.

பின் கோபி தான் சமாதானம் செய்ய வேண்டும் என தாத்தா சொல்ல, ஆன்டி இனிமேல் வருவார்களா என கேட்கிறார் ஜெனி. அவன் செய்தது பெரிய தவறு அவன் செய்ததை எந்த பெண் தான் ஒப்புக் கொள்வாள் என தாத்தா கேட்க, கோபி எங்கேயோ கிளம்பி வருகிறார். ஈஸ்வரி எங்கே கிளம்பிட்டாய் என கேட்க அவள் என்னை வர சொன்னாளே அங்கே தான் போகிறேன் என கோபி சொல்கிறார். பின் தாத்தா எங்கே போகிறாய் என கேட்க நீ எங்கே வேண்டும் என்றாலும் போ ஆனால் பாக்கியாவை சமாதானம் செய்து கூட்டிக் கொண்டு வா என சொல்ல, அவள் கேட்ட விவாகரத்தை நான் கொடுக்க போகிறேன் என சொல்கிறார்.

முதலில் தப்பு செய்தது நீ, அவள் பிடிவாதம் பிடித்து கொண்டிருக்கிறாள், நீயும் போட்டி போடுவியா என கேட்க, கோபி யார் தவறாக நினைத்தாலும் என்னால் அவளை கூட்டிக் கொண்டு வர முடியாது நான் விவாகரத்து கொடுக்க தான் போகிறேன் என கோபி சொல்கிறார். குடும்பத்தில் யாராவது விட்டு கொடுத்தால் தான் நன்றாக இருக்கும் என ஈஸ்வரி சொல்ல, அவள் முடிவு செய்துவிட்டால் நான் விவாகரத்து கொடுக்க போகிறேன் என கோபி சொல்கிறார். இனியா போகாதீங்க டாடி என அழ ஆனால் கோபி நீ அழாதே யாரும் உன்னுடன் இல்லாமல் இருந்தாலும் நான் உன்னுடன் இருப்பேன் என சொல்லி கிளம்புகிறார்.

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் – பள்ளிக்கல்வி துறை முக்கிய அறிவிப்பு!

பின் குடும்பத்தினர் அனைவரும் மனம் உடைந்து இருக்கின்றனர். மறுபக்கம் மயூராவிற்கு உடம்பு சரியாகிவிட்டது. சந்துரு வந்து உடம்பு சரியாகிவிட்டதா என கேட்க சரியானதாக மயூரா சொல்கிறார். நன்றாக ரெஸ்ட் எடுக்க வேண்டும் என ராதிகாவின் அம்மா சொல்கிறார். பின் ராதிகாவின் அலுவலகத்தில் இருந்து போன் வருகிறது குழந்தைக்கு உடம்பு சரி இல்லை அதனால் தான் போகவில்லை என ராதிகா சொல்ல நாளை கிளம்பிடுவேன் என சொல்கிறார். சந்துரு என்ன அவசரம் என கேட்க, ராதிகா கண்டிப்பாக போக வேண்டும் என சொல்கிறார். இதோட நாங்க கிளம்புவது தான் எங்களுக்கு நல்லது என சொல்கிறார். பின் பாக்கியா கோபி பேசுவதை நினைத்து பார்த்து கோர்ட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!