ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTC யின் எச்சரிக்கை பதிவு!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTC யின் எச்சரிக்கை பதிவு!
ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTC யின் எச்சரிக்கை பதிவு!
ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTC யின் எச்சரிக்கை பதிவு!

ரயில்வே நிர்வாகம் முன்பதிவு டிக்கெட்டிற்கான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான புதிய சேவையை தற்போது வழங்கியுள்ளது. இந்நிலையில் டெபிட் , கிரெட் கார்டு, யுபிஐ ஸ்கேன் கோடு அனுப்புங்கள் உங்களுக்கு பணத்தைத் திரும்பி அனுப்பிகிறோம் என்று வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வந்துள்ளதோடு பலர் ஏமாந்து விட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் ரயில்வே நிர்வாகம் டிவிட்டர் வாயிலாக இதற்கு பதிலளித்துள்ளது.

எச்சரிக்கை பதிவு:

ரயில் சேவைளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அவ்வப்போது புதிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. இந்த வகையில் IRCTC ipay ஆப் மூலம் முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டவுடன், அதன் ரீஃபண்ட் உடனடியாக உங்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த நடைமுறையில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக வாடிக்கையாளர்கள் பலர் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு ட்விட்டர் வாயிலாக புகார் அளித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

எனவே ரயில்வே துறையில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்தால் அவற்றை நம்பி நீங்கள் ஏமாற வேண்டாம் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ரயில்வே பணத்தை திரும்ப பெறும் நடைமுறையில் ஊழியர்கள் யாரும் பணியாற்ற மாட்டார்கள் என்பதை நினைவில் கொண்டு தேவையற்ற அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து இந்திய ரயில்வே ட்விட் செய்து உள்ளது.

Work from Home புதிய சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!

அதில் “இந்திய ரயில்வே, IRCTC அல்லது அதன் ஊழியர்கள் பணத்தைத் திரும்பப்பெறும் பிரச்சனையில் உங்களை தொலைபேசியின் வாயிலாக அழைக்க மாட்டார்கள் எனவும் டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு எண்/OTP/ATM பின்/CVV எண் அல்லது பான் எண் அல்லது பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட வங்கித் தகவல்களைக் கேட்கவே மாட்டார்கள் என இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு மொபைல் / லேப்டாப் / டெஸ்க்டாப் போன்றவற்றில் Anydesk/Teamviewer போன்ற ரிமோட் கண்ட்ரோல் ஆப்ஸை நிறுவ வேண்டாம் எனவும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே இனிமேலாவது ரயில் பயணிகள் தேவையில்லாமல் உங்களுக்கு வரும் அழைப்புகளை நம்பி ஏமாறாமல் பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறையில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்டுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!