Work from Home புதிய சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!

0
Work from Home புதிய சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு - மத்திய அரசு வெளியீடு!
Work from Home புதிய சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு - மத்திய அரசு வெளியீடு!
Work from Home புதிய சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு Work from Home என்ற முறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அது இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு Work from Home பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

மத்திய அரசு அறிவிப்பு:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் அலுவலகம் வீடு என இருந்தவர்களுக்கு கொரோனா ஊரடங்கின் போது Work from Home என்ற முறை கொண்டுவரப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து அனைவரும் அலுவலகம் வந்து வேலை செய்யலாம் என சொன்ன பின்னர் கூட பலர் அதற்கு ஆர்வம் செலுத்தவில்லை.

Exams Daily Mobile App Download

அதனால் ஒரு சில ஊழியர்கள் மட்டும் பகுதி நேரம் அலுவலகம், பகுதி நேரம் வீட்டிலிருந்து பணி என்ற ஹைப்ரிட் முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு Work from Home பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் படி ஒரு நிறுவனத்தில் 50 சதவீத ஊழியர்களுக்கு Work from Home வசதியை அனுமதிக்கலாம் என்றும் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க ஒரு நிறுவனம் விரும்பினால் அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக பட்டியலிட்டு அனுமதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தக அமைச்சகத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சட்டத்திட்டத்தின்படி வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் காலத்தை ஒரு ஆண்டாக நீடிக்க அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு மேலும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றால் ஆணையர் அனுமதியுடன் இன்னொரு ஆண்டுக்கு அல்லது 90 நாட்களுக்கு நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் இன்டர்நெட் வசதி, கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன், சிம்கார்டு போன்ற வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும் !

மேலும் அலுவலகம் சார்ந்த ஏதாவது உபகரணத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டுமென்றாலும் நிர்வாகம் அந்த ஊழியருக்கு அனுமதி அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டமானது நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமின்றி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் 2006ஆம் ஆண்டின் விதியில் புதிதாக விதி எண் 43A யில் சேர்க்கப்பட்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் இனி நாடு முழுவதும் ஒரே மாதிரியான ‘வீட்டிலிருந்து வேலை செய்யும்’ விதிகள் அமலாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!