தமிழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் கவனத்திற்கு – AICTE முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் கவனத்திற்கு - AICTE முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் கவனத்திற்கு - AICTE முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் கவனத்திற்கு – AICTE முக்கிய உத்தரவு!

கொரோனா தொற்று நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றி கல்லூரிகளில் வகுப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ( AICTE) அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய உத்தரவு:

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இறுதி ஆண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆன்லைனில் நடத்தப்பட்டது .இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று தணிந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொறியியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

ஆனால், கொரோனா 3 வது அலை தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, இறுதி ஆண்டு மற்றும் எம்இ, எம்டெக் மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் விடுமுறை அளிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் முதல் கல்லூரிகள் இயங்குகிறது. அதன்படி 2022-23 ஆம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் பொறியியல் வகுப்புகளை ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் வாயிலாக நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வியாண்டுக்கான பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையின் 131 கல்லூரிகளிலும் ஒரு இலவச சீட் – துணைவேந்தர் அறிவிப்பு!

இதனை முன்னிட்டு ஜூன் மாதத்தில் முதல் கட்ட கலந்தாய்வை தொடங்கி, ஜூலை 20 அல்லது அதற்கு முன்பாக கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பொறியியல் வகுப்புகளுக்கான இந்த அட்டவணையை அனைத்து கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு உத்தரவிட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!