LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – விலை குறித்த முக்கிய அறிவிப்பு!

0
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - விலை குறித்த முக்கிய அறிவிப்பு!
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - விலை குறித்த முக்கிய அறிவிப்பு!LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - விலை குறித்த முக்கிய அறிவிப்பு!
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – விலை குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த மாதமும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே போல இந்த மாதமும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

LPG சிலிண்டர் விலை:

நாடு முழுவதும் LPG கேஸ் சிலிண்டரின் விலை அவ்வப்போது உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் தான் கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்படுகிறது. கடந்த மே மாதத்தில் மட்டுமே இரண்டு முறை வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துவிட்டது. அதாவது, வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1000த்தை தாண்டிவிட்டது மற்றும் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2000த்தை தாண்டிவிட்டது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் சிலிண்டரின் விலை எவ்வளவு உயரப் போகிறதோ என மக்கள் பீதியில் இருந்தனர்.

Exams Daily Mobile App Download

ஆனால், ஜூன் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனையடுத்து, ஜூன் மாதத்தில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.134 குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை ரூ.2,373 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதாவது, வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இரண்டாவது முறையாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் – சுங்கச்சாவடி நோட்டீஸ்!

இது மட்டுமல்லாமல் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை மீண்டும் ரூ.187 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ1018.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை ரூ.2,373 லிருந்து ரூ.187 குறைந்து ரூ.2,186 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை ரூ.2,186 க்கும், சேலத்தில் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை ரூ.2,139க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாததால் தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!