ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!

0
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு!
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு!
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!

SBI வங்கியை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியும் நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு நிலையான வைப்புகளுக்கும் எவ்வளவு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ICICI வங்கி வாடிக்கையாளர்கள்

நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியும் தற்போது நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதாவது, ₹2 கோடிக்கும் குறைவான FD விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய FD விகிதம் நேற்றில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு பொது மக்களுக்கு 2.75% முதல் 5.90% வரையிலான வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 3.25% முதல் 6.60% வரையிலான வட்டியும் வழங்கப்படுகிறது.

மேலும், 7 நாட்கள் முதல் 29 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், 2.75% வட்டி விகிதமே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.25% வட்டி விகிதமே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 2 ஆண்டு வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.35% லிருந்து 5.50% ஆக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை ஆவின் பால் நிறுவனத்தில் குடிநீர் திட்டம்? முக்கிய தகவல் வெளியீடு!

Exams Daily Mobile App Download

அதே போல, 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 10 அடிப்படை புள்ளிகளால் 5.50% லிருந்து 5.60% ஆக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.70% லிருந்து 6.10% ஆகவும், 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 5.70% லிருந்து 6.10% ஆகவும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வட்டி விகிதம் அக்டோபர் 7 ஆம் தேதி வரைக்கும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!