HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – விதிமுறைகள் மாற்றம்!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - விதிமுறைகள் மாற்றம்!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - விதிமுறைகள் மாற்றம்!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – விதிமுறைகள் மாற்றம்!

தனியார் வங்கியான HDFC வங்கி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ளது. யுபிஐ பயனர்கள் இதை தெரிந்து கொள்வது அவசியம். இப்பதிவில் மாறியுள்ள விதிமுறைகள் குறித்து காண்போம்.

புதிய விதிமுறைகள்:

இந்தியாவில் வங்கிகள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பதால் கடந்த வருடங்களில் நிலவிய ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் பகுதி நேரமாக இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் வங்கி பண பரிவர்த்தனைகள் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் 10,000த்திற்கு மேல் பணம் எடுக்கும் போது ஒடிபி கட்டாயமாக்கப்பட்டது. மெட்ரோ நகரங்களில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? எக்ஸ்.இ வகை வைரஸ் பரவல் எதிரொலி!

பிற நகரங்களில் மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்த நிதியாண்டு தொடங்கியுள்ளதை அடுத்து தனியார் வங்கியான HDFC யுபிஐ பரிவர்த்தனை விதிமுறைகளை மாற்றியுள்ளது. தற்போது Gpay, Phonepe, Paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் எளிதாக பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனியார் வங்கியான HDFC யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ளது.

TNPSC Group 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மேலும் யுபிஐ பரிவர்த்தனை பயன்படுத்துவோர் 24 மணி நேரத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுப்ப முடியும். அல்லது ஒரு நாளைக்கு 10 பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். மேலும் மொபைல், சிம் கார்டு, மொபைல் நம்பர் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றியிருந்தால் ஆண்ட்ராய்டு போனில் முதல் 24 மணி நேரம் வரையிலும், ஐபோனில் 72 மணி நேரம் வரையிலும் 5000 ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!