PM-KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – eKYC கான காலக்கெடு நிறைவு!

0
PM-KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு - eKYC கான காலக்கெடு நிறைவு!
PM-KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு - eKYC கான காலக்கெடு நிறைவு!
PM-KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – eKYC கான காலக்கெடு நிறைவு!

PM-KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் 12ஆவது தவணைக்கான நிதியுதவியை பெற விரும்பினால் கட்டாயமாக eKYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். அதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அடுத்து என்ன செய்வது என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PM-KISAN திட்டம்:

இந்தியா முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்று பயனடைந்து வருகின்றனர். அதாவது, இந்த ஏழை விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என்கிற கணக்கில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர். இது வரைக்கும் ஏழை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 11 தவணைக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து விவசாயிகள் காத்து கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும், விவசாயிகள் இந்த பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியை பெறுவதற்கு eKYC செயல்முறையை கட்டாயமாக முடித்திருக்க வேண்டும். மேலும், eKYC செயல்முறையை முடிப்பதற்கு ஜூலை 31 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான காலக்கேடு நேற்றுடன் முடிந்துவிட்டதால் eKYC செயல்முறையை முடிக்காதவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர படிப்பு – விண்ணப்பிக்க ஆக. 3 கடைசி நாள்

தற்போது PM கிசான் புதுப்பிப்பதில் ஆதார் OTP அடிப்படையில் அங்கீகாரத்தை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். முதலில், PM Kisanன் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று farmers corner என்கிற பகுதிக்குள் சென்று eKYC tab என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, உங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து Search என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணையும் பதிவு செய்துவிட்டால் eKYC செயல்முறையை முடித்துவிடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!