தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர படிப்பு – விண்ணப்பிக்க ஆக. 3 கடைசி நாள்!
தமிழகத்தில் பகுதி நேர முதலாமாண்டு பொறியியல் படிப்புகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கோயம்புத்தூர் பொறியியல் கல்லூரி (சி.ஐ.டி) சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
பகுதி நேர படிப்புகள்:
தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேரமாக பி.இ. படிப்புகள் கற்பிக்கப்பட உள்ளன. மேலும் மாணவா் சோ்க்கை பணிகளை கோவை சிஐடி கல்லூரி ஒருங்கிணைக்கிறது.
Exams Daily Mobile App Download
வரும் கல்வி ஆண்டுக்கான பகுதி நேர பி.இ. படிப்புக்கு ஜூலை 4ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு1109 போ் விண்ணப்பித்துள்ள நிலையில் ஜூலை 30 ஆம் தேதி வரையில் 609 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையத்தில் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருமலை திருப்பதி கோவிலில் விரைவு டிக்கெட் – நாளை (ஆகஸ்ட் 2) இணையதளத்தில் வெளியீடு
இதையடுத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைய வழியில் சமா்ப்பிக்கலாம் என்று மாணவா் சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் கல்பனா தெரிவித்துள்ளாா். மேலும் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும், இந்த கல்வியாண்டில் விண்ணப்பப் பதிவு, சமர்ப்பிப்பு, சான்றிதழ் சரிபாா்ப்பு, தரவரிசை, கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இணைய வழியாக மட்டுமே நடைபெறும் எனவும், இது தொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு 0422-2590080, 94869- 77757 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.