CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முடிவுகள் வெளியீடு!

0
CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - முடிவுகள் வெளியீடு!
CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - முடிவுகள் வெளியீடு!
CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானதை தொடர்ந்து, இன்று மதியம் 2 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. எனவே சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு முடிவுகள்:

கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ வாரியம் நடத்தியது. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. மேலும் இதன் முடிவுகளுக்காக மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் எதிர்பார்ப்பில் காத்துகொண்டு இருந்தனர். இந்நிலையில் இன்று காலை (ஜூலை 22) 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதில் மாணவிகள் 94.54 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.25 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்கள் https://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவு எண், பள்ளிக்குறியீடு எண், அட்மிட் கார்டு எண் உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து தங்களது முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், cbse 12 என டைப் செய்து இடைவெளிவிட்டு, பதிவு எண்ணை டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பியும் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு – 100 யூனிட் மின்சாரம் நிறுத்தம்!

இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மேலும் www.cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 98.78% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்தியாவிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.68% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 20,93,978 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்த நிலையில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!