பாரதி கண்ணம்மா சீரியலில் அருணுக்கு பதிலாக நடிக்கும் ஆர்யன் – ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் அருணுக்கு பதிலாக நடிக்கும் ஆர்யன் - ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா சீரியலில் அருணுக்கு பதிலாக நடிக்கும் ஆர்யன் - ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா சீரியலில் அருணுக்கு பதிலாக நடிக்கும் ஆர்யன் – ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்ப்பதால் இருவரும் சேர வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்த்த சமயத்தில் இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அம்மா இல்லாமல் தவித்து வந்த கண்ணம்மாவை கருப்பாக இருந்த காரணத்தினால் அனைவருமே வெறுத்து ஒதுக்கினர். அப்போது கண்ணம்மாவின் உண்மையான அன்பை பாரதி தான் புரிந்துகொண்டு திருமணம் செய்து கொள்கிறேன் என கூறினார். கண்ணம்மாவை பாரதி திருமணம் செய்தது பாரதியின் குடும்பத்தில் உள்ள யாருக்குமே பிடிக்கவில்லை. சௌந்தர்யா கூட கண்ணம்மாவின் நிறத்தை வைத்து வெறுத்து ஒதுக்கினார்.

Exams Daily Mobile App Download

அப்போது கண்ணம்மாவிற்கு முழுக்க முழுக்க பாரதி தான் துணையாக இருந்து வந்தார். பின்பு, கண்ணம்மா கர்ப்பமானதும் பாரதிக்கு சந்தேகம் என்கிற ஒரு நோய் வந்து தொற்றிக் கொண்டது. இது என்னுடைய குழந்தை இல்லை என கூறி கண்ணம்மாவை வீட்டை விட்டு துரத்தினார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கண்ணம்மாவை விட்டு பிரிந்து இருக்கிறார். கண்ணம்மா உண்மையாகவே தவறு செய்தாளா அல்லது நாம் தான் தேவையில்லாமல் கண்ணம்மாவை சந்தேகப்பட்டு கொண்டிருக்கிறோமா என நினைக்கும் போதெல்லாம் வெண்பா பாரதியின் மனதை மாற்றி கண்ணம்மாவை வெறுக்க வைக்கிறார்.

பாக்கியாவை கிட்ட வைத்துக்கொண்டு ராதிகாவிடம் பேச முடியாமல் தவிக்கும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். என்ன தான் கண்ணம்மாவை விட்டு பாரதி விலக நினைத்தாலும் விதி அவர்களை சேர்த்து வைக்கவே நினைக்கிறது. இருவரும் ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேந்துள்ளதால் பாரதியும் கண்ணம்மாவும் சேர வாய்ப்பிருக்கிறது என ரசிகர்கள் நிம்மதியடைந்த வேளையில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!