பாக்கியாவை கிட்ட வைத்துக்கொண்டு ராதிகாவிடம் பேச முடியாமல் தவிக்கும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

0
பாக்கியாவை கிட்ட வைத்துக்கொண்டு ராதிகாவிடம் பேச முடியாமல் தவிக்கும் கோபி - ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவை கிட்ட வைத்துக்கொண்டு ராதிகாவிடம் பேச முடியாமல் தவிக்கும் கோபி - ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவை கிட்ட வைத்துக்கொண்டு ராதிகாவிடம் பேச முடியாமல் தவிக்கும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

பாக்கியா தற்போது கோபியின் ரூமில் தான் தூங்கி கொண்டிருக்கிறார். இதனால் பாக்கியாவிற்கு தெரியாமல் ஒளிந்து ஒளிந்து தான் ராதிகாவிடம் பேசி கொண்டிருக்கிறார். ராதிகாவிடம் கோபி பேசும் போது பாக்கியா பார்த்து யார் இந்த நேரத்தில் கால் செய்தது என கேட்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோபியின் திருட்டுத்தனம் அனைத்தும் பாக்கியாவிற்கு எப்போது தான் தெரியவரப் போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். கோபி என்ன தான் தவறு செய்தாலும் கூட கோபியை பாக்கியா கண்மூடி தனமாக நம்பி கொண்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பாக்கியாவும் ராதிகாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் தன்னைப் பற்றிய உண்மைகள் அனைத்தும் இருவருக்கும் தெரிய வாய்ப்பிருக்கிறது என கோபி இருவரையும் பிரிக்க நினைக்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆரம்பத்தில் எப்போவாது தான் ராதிகாவை கோபி சந்திக்க செல்வார். தற்போது முழுக்க முழுக்க வேலைக்கு கூட செல்லாமல் ராதிகாவுடன் தான் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார். இரவு நேரங்களில் கூட ராதிகா வீட்டில் தான் தங்கி விடுகிறார். அப்போது கூட பாக்கியாவிற்கு கோபியின் மீது சந்தேகம் வரவில்லை. ராதிகாவின் வீட்டிற்கு செல்ல முடியாத நேரத்தில் மட்டுமே பாக்கியாவின் வீட்டில் இரவு தங்குவார். அப்போதும் கூட இரவு முழுக்க ராதிகாவிடம் தான் போனில் பேசிக்கொண்டிருப்பார். தற்போது கூட கோபியின் அறையிலேயே தான் பாக்கியாவும் தூங்குவார் என எழில், செழியன் என அனைவரும் கூறிவிடுகின்றனர்.

மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – வைரலாகும் வீடியோ!

இதனால் பாக்கியாவின் பக்கத்தில் படுத்திக்கொண்டே கோபிக்கு தெரியாமல் ராதிகாவிடம் தெரியாமல் போன் பேசியபடி இருப்பார். அதே போல பாக்கியா கிட்ட தான் தூங்கி கொண்டிருக்கிறார் என்பது தெரியாமல் ராதிகாவுக்கு கோபி கால் செய்கிறார். பின்பு, பாக்கியா ஏன் தினமும் அதுவும் இந்த நேரத்தில் போன் பேசுகிறீர்கள் என கேட்கிறார். உடனே கோபி பயந்து என் நண்பனிடம் தான் பேசுவேன் வேறு எதுவும் இல்லை என கூறி சமாளிக்கிறார். பின்பு, ராதிகாவும் விடாமல் கோபிக்கு கால் செய்துகொண்டே இருக்கிறார். பாக்கியாவிடம் மாட்டிவிடுவோம் எனபயந்து போனை சுவிட்ச்ஆப் செய்துவிடுகிறார். ஏன் கோபி இப்படி செய்கிறார் என ராதிகா சந்தேகப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here