இந்தியாவில் IT நிறுவன ஊழியர்கள் “WFO” முறைக்கு திரும்ப ஆர்வம் காட்டவில்லையா? ஆய்வில் தகவல்!

0
இந்தியாவில் IT நிறுவன ஊழியர்கள்
இந்தியாவில் IT நிறுவன ஊழியர்கள் "WFO" முறைக்கு திரும்ப ஆர்வம் காட்டவில்லையா? ஆய்வில் தகவல்!
இந்தியாவில் IT நிறுவன ஊழியர்கள் “WFO” முறைக்கு திரும்ப ஆர்வம் காட்டவில்லையா? ஆய்வில் தகவல்!

இந்தியாவில் ஐடி நிறுவன ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் வர வைக்க நிறுவனம் திணறி வருவதாக கூறப்பட்டு வருகிறது. ஐடி நிறுவனங்கள் முழுமையாக WORK FROM HOME அல்லது ஹைபிரிட் முறையில்தான் பணிபுரிய வேண்டிய நிலை தான் எதிர்காலத்தில் ஏற்படும் என்றும், 100 சதவீதம் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் ஐடி நிறுவனங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திணறும் IT நிறுவனங்கள்:

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் உலகில் உள்ள அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்தது . இந்நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்களில் பணிபுரியும் நான்கில் மூன்று பணியாளர்கள் வாரத்திற்கு ஒரு முறை கூட அலுவலகத்திற்கு வருவதில்லை என்று CIEL HR நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது 9 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வேலை செய்யும், முன்னணியில் உள்ள முதல் 10 ஐ.டி.நிறுவனங்கள் உட்பட 40 நிறுவனங்களில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த ஆய்வில், கிட்டத்தட்ட 50 % ஐடி நிறுவனங்கள் கடுமையாக முயற்சித்து ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் வந்து பணிபுரிய அழைத்து பார்த்தும் பயனில்லை. இந்நிலையில், கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் 30% நிறுவனங்கள் இன்னும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன. ஆனால் மீதமுள்ள நிறுவனங்கள் அலுவலகத்தில் இருந்து பணியைத் தொடங்கியுள்ளன அல்லது ஊழியர்களை அலுவலக இடங்களுக்கு விரைவில் அழைக்க திட்டமிட்டுள்ளன. ஆனால் பணியாளர்கள் WORK FROM HOME முறையிலிருந்து மாறுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தீவிரமடையும் கொரோனா பாதிப்புகள் – திடீரென மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு!

இருப்பினும் , 40 சதவீத நிறுவனங்கள் ஹைபிரிட் முறையில் இயங்கி, ஊழியர்களை வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்யச் சொல்கிறது. ஹைபிரிட் சுழற்சி முறையில் அலுவலகத்திற்கு வரச் சொல்லியும், இந்த நிறுவனங்களில் 25 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு திரும்பியுள்ளனர். மறுபுறம் சிறிய ஐடி நிறுவனங்களில் 30 சதவீத ஊழியர்கள் முழுநேர அடிப்படையில் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மொத்தத்தில் ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை மீண்டும் அலுவலத்திற்கு திரும்ப வரவழைப்பதில் திணறி வருகிறது என்பதுதான் இந்த ஆய்வின் முடிவு என தெரிய வருகிறது. எனத்தெம் திறமையான ஐடி ஊழியர்களுக்கு எந்த ஐடி நிறுவனத்திலும் உடனடியாக வேலை கிடைக்கும் என்பதால், அலுவலகம் வர கட்டாயப்படுத்தினால் அவர்கள் வேலையை ராஜினாமா செய்ய கூட தயங்குவதில்லை என ஐடி சேவை நிறுவனத்தின் ஹெச்.ஆர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!