ஜூன் 19ல் சென்னையில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – பராமரிப்பு பணிகள்!
தமிழகத்தின் தலைநகர் சென்னை மாவட்டத்தில் நாளை முதல் மின் பராமரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. அதானல் மின்தடை ஏற்படும் என சென்னை மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் பராமரிப்பு பணிகள் தொடக்கம்:
தமிழகத்தில் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மின் வாரியம் மூலமாக மின் கம்பங்கள் பராமரிப்பு மற்றும் பிற பணிகள் நடைபெறும். இதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. கடந்த ஒரு வருட காலமாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு மாவட்டமாக மின் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பகுதிகளை தேர்தெடுத்து மின் ஊழியர்கள் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றுடன் பராமரிப்பு பணிகள் முடிந்தது. அடுத்தபடியாக நாளை சென்னையில் பணிகள் துவங்க உள்ளது. நாளை (ஜூன் 19) பட்டாபிராம், திருமுல்லைவாயில், காந்திநகர், மணலி புதுநகர், அடையார் சாஸ்திரி நகர், வேளச்சேரி, எம்.ஜி.ஆர். நகர், ஐ.டி கோரிடர் மேலும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என சென்னை மின் வாரியம் தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதனை தொடர்ந்து சைதாப்பேட்டை, போரூர், நீலாங்கரை, பாலவாக்கம், கிண்டி ,கேகே நகர், அம்பத்தூர், சின்ன நீலா கரிகுப்பம், ரங்கரெட்டி கார்டன், மேட்டு காலனி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், டி.ஜி நகர், அசோக் நகர், கே.கே நகர், வடபழனி, அழகிரி நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை மின் பராமரிப்பு நடைபெறும் அதனால் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.