தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை, பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் பொதுத் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த தகவலை பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகம் கொரோனா முதல், இரண்டாவது அலை, மூன்றாம் அலை என மூன்று அலைகளை சந்தித்தது. இந்த நோய்த்தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் நடப்பு ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் ஓமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டு கொரோனா எதிரொலியாக 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
எனவே நடப்பு ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நடப்பு ஆண்டு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படாது கண்டிப்பாக நடைபெறும் என உறுதி அளித்தார். அதன்படி அண்மையில் பொதுத் தேர்வுக்கான அட்டவணைகளும் வெளியானது. இந்த அட்டவணை படி 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதே போல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புகளுக்கு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
மேலும் மற்ற வகுப்புகளான 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும். மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டுக்கான அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கும் மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ந் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால் பொதுத்தேர்வுகள் மற்றும் இறுதி தேர்வுகள் மே இறுதி வரை நடைபெறுகிறது. அதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை நாட்கள் குறைந்த நாட்களாக விடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்