மத்திய அரசின் PM KISAN பயனாளிகளுக்கு எச்சரிக்கை – தவணைத் தொகையை திரும்ப வழங்க உத்தரவு!

0
மத்திய அரசின் PM KISAN பயனாளிகளுக்கு எச்சரிக்கை - தவணைத் தொகையை திரும்ப வழங்க உத்தரவு!
மத்திய அரசின் PM KISAN பயனாளிகளுக்கு எச்சரிக்கை - தவணைத் தொகையை திரும்ப வழங்க உத்தரவு!
மத்திய அரசின் PM KISAN பயனாளிகளுக்கு எச்சரிக்கை – தவணைத் தொகையை திரும்ப வழங்க உத்தரவு!

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துபவர்கள் போன்ற தகுதியற்ற விவசாயிகளும் இணைந்து நிதியுதவி பெறுவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதுபோன்று நிதியுதவி பெறுபவர்களைக் கண்டுபிடித்து அவர்களை திட்டத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது

எச்சரிக்கை அறிவிப்பு:

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மத்திய அரசு வழங்கி வருகிறது. இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 10 கோடி விவசாயிகள் பயன் பெறுகின்றனர். ஏற்கனவே 10 தவணைகள் பெற்றுள்ள நிலையில், 11-வது தவணைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிரதான் மந்திரி கிசான் உதவித்தொகை வழங்கும் முறையை மத்திய அரசு மாற்றியுள்ளது.

தமிழகத்தில் மே 20 வரை பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு!

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே 11-வது தவணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிக் கணக்குடன் KYC எனப்படும் ஆதார் விபரங்களை விவசாயிகள் அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 3.15 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் நிதியுதவி பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.

இவர்களில் 2.55 கோடிப் பேர் ஒரு முறையாவது நிதியுதவி பெற்றவர்கள் ஆவர். அதேபோல், திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 6.18 லட்சம் பேரின் ஆதார் விவரங்களை தவறாக பயன்படுத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், தகுதியற்ற நபர்கள் பெற்ற நிதியுதவியைத் திரும்பப் பெறும் நடவடிக்கையில் மத்திய அரசு களம் இறங்கி உள்ளது. கணவன் – மனைவி இருவருமே நிதியுதவி பெறுவதாகவும் அதிக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதை தடுக்க, தகுதியற்ற நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பணம் வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தில் நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்றோர் இணைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!